இந்திய உற்பத்தியாளர்களை பாதுகாக்க முயற்சி???
வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹாட்- ரோல் செய்யப்பட்ட தட்டையான எஃகு தயாரிப்புகளுக்கு இந்தியா ஐந்து ஆண்டுகளுக்கு இறக்குமதி வரி விதித்துள்ளது.
உலோகக் கலவை, அல்லது உலோகக் கலவை அல்லாத இருவகையான தயாரிப்புகளுக்கும் இது பொருந்தும். மிக மலிவு விலையில் வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இவ்வகை எஃகு (steel ) பொருட்களினால் இந்திய உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இவ்வகை எஃகு பொருள்களுக்கு (Anti dumping) டம்பிங் இறக்குமதி வரி விதிக்கப்படாவிட்டால், உள்நாட்டுத் தொழிலுக்கு மோசமான சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, ஹோவா பாட் டங் குவாட் ஸ்டீல் JSC நிறுவனத்திற்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . மற்ற அனைத்து வியட்நாமிய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களும், இவ்வகை தயாரிப்புகளுக்கு, மெட்ரிக் டன்னுக்கு $121.55 Anti டம்பிங் இறக்குமதி வரியை எதிர்கொள்வார்கள். வியட்நாமிய அல்லாத உற்பத்தியாளர்களால் வியட்நாமிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கும் இதே விகிதம் பொருந்தும்.
25 மில்லிமீட்டர் வரை தடிமன் மற்றும் 2,100 மில்லிமீட்டர் வரை அகலம் கொண்ட, உறையிடப்படாத, பூசப்பட்ட அல்லது பூசப்படாத, அலாய் அல்லது அலாய் அல்லாத எஃகு ஆகியவற்றால் ஆன சூடான-உருட்டப்பட்ட தட்டையான தயாரிப்புகளுக்கு இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.
இவை 7208, 7211, 7225 மற்றும் 7226 என்ற இறக்குமதி பொருட்கள் பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரி விதிப்பு துருப்பிடிக்காத எஃகு சூடான, உருட்டப்பட்ட தட்டையான தயாரிப்புகளுக்குப் பொருந்தாது என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
”வியட்நாமில் இருந்து சூடான-உருட்டப்பட்ட எஃகு சுருள்களின் இறக்குமதிக்கு Anti டம்பிங் இறக்குமதி வரி விதிக்கப்படுவது உள்நாட்டு எஃகு தொழிலுக்கு மிகவும் தேவையான நடவடிக்கையாகும்” என்று இந்திய எஃகு சங்கத்தின் தலைவர் நவீன் ஜிண்டால் கூறினார்.
