22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

தொடர்ந்து இழப்புகளை சந்திக்கும் ஸ்விக்கி

ஸ்விக்கியின் உணவு விநியோக வணிகம் வலுவாக இருக்கும் அதே வேளையில், விரைவான வர்த்தகத்தில் தீவிர விரிவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதால் ஸ்விக்கியின் இழப்புகள் 109% அதிகரித்துள்ளன. இதன் EBITDA இழப்பு செப்டம்பர் 30, 2025 அன்று முடிவடைந்த ஆறு மாதங்களுக்கு, $17.8 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் $8.5 கோடியாக இருந்தது.

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் அதிகரித்த செலவினங்களால் இழப்புகள் வெகுவாக அதிகரித்துள்ளன. டார்க் ஸ்டோர்கள் மற்றும் கடைசி மைல் டெலிவரி திறன்களில் முதலீடுகள் அதிகரிப்பு மற்றும் போட்டியாளர்களை சமாளிக்கும் விதத்தில் விலை நிர்ணயம் ஆகியவை, மொத்த வருவாய் அளவை விட அதிகமாக உள்ளன. வேகமாக வளர்ந்து வரும் விரைவு வர்த்தக சந்தையில் அதன் பங்கை உறுதிப்படுத்த இந்நிறுவனம் வேண்டுமென்றே குறுகிய கால லாபத்தை தியாகம் செய்து வருவதாக புரோசஸ் கூறியுள்ளது. “Instamart (விரைவு வர்த்தகம்) அதன் GOV ஐ இரட்டிப்பாக்கி, 105% வளர்ச்சியடைந்தது.

சராசரி ஆர்டர் மதிப்பு Q1 FY26 இல் (ஏப்ரல் முதல் ஜூன் 2025 வரை) 26% உயர்ந்தது. அதே சமயத்தில், விரிவாக்கம் மற்றும் விரைவான வர்த்தகத்தில் போட்டித் தன்மையை நிலைநாட்டுவதற்காக செய்யப்படும் முதலீடுகள் அதிகரித்துள்ளதால், EBITDA இழப்புகள் அதிகரித்துள்ளன” என்று கூறியுள்ளது.

ஸ்விக்கியின், செயலில் உள்ள வாடிக்கையாளர் தளம் ஆண்டுக்கு ஆண்டு 35% விரிவடைந்து 2.16 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மொத்த ஆர்டர் மதிப்பு (GOV) 43% உயர்ந்தது. இது நிலையான உணவு விநியோக வளர்ச்சி மற்றும் போல்ட் போன்ற புதிய எக்ஸ்பிரஸ் ரக திட்டங்கள் இதற்கு உதவியுள்ளன.

உணவு விநியோக GOV இந்த காலகட்டத்தில் 18% வளர்ந்தது. இந்த பிரிவில் லாப போக்குகளை மேம்படுத்துவதை இது சுட்டிக்காட்டுவதாக Prosus கூறியுள்ளது.

Instamart இன் GOV இரட்டிப்பாக்கப்பட்டு, 105 % உயர்ந்தது. அதே நேரத்தில் FY26 இன் முதல் காலாண்டில் சராசரி ஆர்டர் மதிப்பு 26% அதிகரித்துள்ளது. வணிகம் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாகவும், ஆனால் உள்கட்டமைப்பு செலவுகள், டெலிவரி செலவுகள், மற்றும் சந்தை போட்டி தொடர்பான செலவுகளை இது உயர்த்துவதாகவும் ப்ரோசஸ் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *