Latest:
இந்திய அரசின் UPI கொள்கை மாற்றமும், வாராக்கடன்கள் தள்ளுபடியும்The UPI U-Turn from the Government of India and the Paradox of Pardoning the Loans and Debts of Billionairesபால் பவுடர் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா மீது FSSAI சட்ட நடவடிக்கைஜூலை, ஆக். _ IPOகளில் ரூ. 12,618 கோடி முதலீடு செய்த சில்லரை முதலீட்டாளர்கள்உயர்தர இரு சக்கர வாகனங்ககளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்கள்HIV தடுப்பு மருந்துக்காக கிலியட் நிறுவனத்துடன் Dr.ரெட்டிஸ் ஒப்பந்தம்அரம்கோ மற்றும் SAP உடன் இணைந்து புதிய AI கருவியை அறிமுகப்படுத்தும் விப்ரோஎன். சந்திரசேகரன் பதவிக்கால நீட்டிப்பினால் டாடா குழுமப் பங்குகள் ஏற்றம்வாகன சிப்களுக்கான TCSஇன் பிரத்யேக சிப் வடிவமைப்பு சேவைகள்The BRICS Taleஇந்திய அரசின் UPI கொள்கை மாற்றமும், வாராக்கடன்கள் தள்ளுபடியும்The UPI U-Turn from the Government of India and the Paradox of Pardoning the Loans and Debts of Billionairesபால் பவுடர் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா மீது FSSAI சட்ட நடவடிக்கைஜூலை, ஆக். _ IPOகளில் ரூ. 12,618 கோடி முதலீடு செய்த சில்லரை முதலீட்டாளர்கள்உயர்தர இரு சக்கர வாகனங்ககளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்கள்HIV தடுப்பு மருந்துக்காக கிலியட் நிறுவனத்துடன் Dr.ரெட்டிஸ் ஒப்பந்தம்அரம்கோ மற்றும் SAP உடன் இணைந்து புதிய AI கருவியை அறிமுகப்படுத்தும் விப்ரோஎன். சந்திரசேகரன் பதவிக்கால நீட்டிப்பினால் டாடா குழுமப் பங்குகள் ஏற்றம்வாகன சிப்களுக்கான TCSஇன் பிரத்யேக சிப் வடிவமைப்பு சேவைகள்The BRICS Tale

உள்நாட்டு செய்திகள்

RBL -ENBD தீவிர ஆலோசனை..!

இந்திய தனியார் வங்கியான RBL வங்கி மற்றும் எமிரேட்ஸ் NBD (ENBD) ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் மும்பையில் சந்தித்து, எதிர்கால வணிகத் திட்டங்களைப் பற்றி விவாதித்தனர். மும்பை ட்ரைடென்ட் நாரிமன் பாயிண்டில் நடைபெற்ற முழு நாள் கூட்டம், RBL வங்கியில் பெரும் பகுதி பங்குகளை ENBD வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் பெரிய கலந்துரையாடலாகும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் தோராயமாக $300 கோடி அல்லது ₹26,850 கோடி அளவுக்கு RBL வங்கியில், எமிரேட்ஸ் NBD (ENBD) முதலீடு செய்ய உள்ளது. RBL வங்கியில் 60 சதவீதம் வரை முன்னுரிமை பங்குகள் வெளியீடு மூலம் இது செய்யப்பட உள்ளது. பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக, இந்திய பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் (செபி) கையகப்படுத்தல் விதிமுறைகளுக்கு இணங்க, RBL வங்கியின் பங்குதாரர்களிடமிருந்து 26 சதவீதம் வரை வாங்குவதற்கு ENBD ஒரு திறந்த கொள்முதல் திட்டத்தையும் செயல்படுத்தும்.

RBL வங்கி சில்லறை ரக கடன் விநியோகத்தில் தடம் பதித்துள்ள ஒரு சிறிய மற்றும் நடுத்தர கால கடன் வழங்குநராகும். ENDB–RBL வங்கி பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள ஒரு உயர் அதிகாரி, “இந்த சந்திப்பு நீண்ட கால அடிப்படையில், குறிப்பாக கார்ப்பரேட் துறைக்கான பெரிய ஒப்பந்தங்களில், எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கும் ஆகும்”என்று கூறியள்ளார்.

1943 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் ரத்னாகர் வங்கியாக நிறுவப்பட்ட RBL வங்கியின் MD & CEOஆக 2010இல், பாங்க் ஆஃப் அமெரிக்காவின் முன்னாள் நாட்டுத் தலைவரான விஸ்வவீர் அஹுஜா, உயர்மட்ட வெளிநாட்டு வங்கியாளர்கள் குழுவுடன் பொறுப்பேற்றார். அதன் பிறகு இந்த வங்கி பெரும் மாறுதல்களுக்கு உட்பட்டது. புதிய மூலதனத்தைத் ஈர்த்து, வங்கியின் வளர்ச்சியை மேம்படுத்தினர்.

கொரொனா தொற்றின் போது, வாராக் கடன்கள் மற்றும் உயர்மட்ட தலைமைத்துவம் குறித்த ரிசர்வ் வங்கி தெரிவித்த கவலைகள் காரணமாக அஹுஜா வங்கியை விட்டு வெளியேறினார். ஆர். சுப்பிரமணியகுமார் 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வங்கியில் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக சேர்ந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *