இன்போசிஸ் shares உங்ககிட்ட இருக்கா?? ஹாப்பி நியூஸ் ..
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் பங்குகளை மீண்டும் வாங்குவதற்கான பதிவு தேதி நவம்பர் 14 என அறிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் ₹18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை மீண்டும் வாங்குவதாக அறிவித்திருந்தது. இது அதன் ஐந்தாவது மற்றும் மிகப்பெரிய பங்குகளை திரும்பப் பெறும் திட்டம் ஆகும்.
இதன் பொருள் நவம்பர் 14 அன்று இன்ஃபோசிஸின் பங்குகளை வைத்திருப்பவர்கள், இந்த பங்கு திரும்பப் பெறுதல் திட்டத்தில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள்.
டெண்டர் சலுகை முறையில் பங்குகள் திரும்பப் பெறப்பட உள்ளன. அதாவது தகுதியான பங்குதாரர்களிடமிருந்து, குறிப்பிட்ட விலையில் பங்குகள் மீண்டும் வாங்கப்படும்.
இன்ஃபோசிஸின் நிறுவனர்கள் இந்த பங்கு திரும்பப் பெறுதல் திட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர். இது சில்லறை முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் அதிக அளவில் பங்கு பெறுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கிறது.
இன்ஃபோசிஸின் ஒரு பங்கிற்கு திரும்பப் பெறுதல் விலை ₹1,800ஆக நிர்ணயம் செய்துள்ளது. வியாழன் அன்று இன்போசிஸ் பங்குகளில் இறுதி விலையுடன் ஒப்பிடும் போது இது 23% அதிகமாகும். மறு கொள்முதல் தொடர்பான பிற விவரங்கள், தேதி, ஏற்றுக்கொள்ளும் விகிதம் உள்ளிட்டவை இன்னும் வெளியிடப்படவில்லை.
நேற்று மாலை இன்போசிஸ் பங்கு விலை ₹1,466.5ஆக முடிவடைந்தது. கடந்த ஒரு மாதத்தில் பங்கு விலை நிலையாகவே உள்ளது. மேலும் இந்த ஆண்டு இதுவரை 22% குறைந்துள்ளது
