22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

டாடாவை காப்பி அடிக்கிறதா L&T?

3,000கோடி டாலர் ஆண்டு வருவாய் கொண்ட, பொறியியல் முதல் கட்டுமானம் வரையிலான பல்வேறு துறைகளில் கோலோச்சும் லார்சன் & டூப்ரோ (எல்&டி) குழுமம், நவீன உற்பத்தித் துறையில் விரிவாக்கம் செய்து வருகிறது. உள்நாட்டு சந்தை மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்கான எலக்ட்ரானிக்ஸ், விண்வெளி, பாதுகாப்பு மற்றும் செமி கண்டக்டர் உற்பத்தியில் சிறப்பு கவனம் செலுத்துகிறது.

இந்திய விண்வெளி சங்கத்தின் தலைவரும், எல் & டி பிரிசைசன் எஞ்சினீயரிங் அண்ட் சிஸ்டம்ஸின் தலைவருமான அருண் ராம்சந்தானி, உற்பத்தி அளவை மேம்படுத்துவதே குழுவின் நோக்கம் என்றும், 2025-26 இறுதிக்குள் பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி $100 கோடியாக அதிகரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

“நாம் வெறும் உற்பத்தியைத் தாண்டிச் செல்ல வேண்டும். தொழில்துறைக்கான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், செமிகண்டக்டர்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஆகிய பிரிவுகள், நமது சொந்த ஐபி (அறிவுசார் சொத்து) மற்றும் தயாரிப்புகளை உருவாக்கவும், மேம்பட்ட உற்பத்தியில் நாம் செய்யும் பணிக்கு அப்பால் மதிப்பைச் சேர்க்கவும் உதவுகின்றன” என்றார்.

அமெரிக்க அரசு அதீத இறக்குமதி வரிகளை விதித்துள்ள நிலையில், சீனாவிலிருந்து உற்பத்தி நிறுவனங்களை ஈர்ப்பதற்கான இந்தியாவின் லட்சியத்துடன் எல் அண்ட் டி குழுவின் திட்டங்கள் ஒத்துப் போகின்றன.

பாதுகாப்புப் பிரிவில், எல் அண்ட் டியின் தற்போதைய பணியில் டாங்கிகள், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதும், அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதும் அடங்கும்.

அண்மையில் இந்திய இராணுவம் BvS-10 சிந்து வாகனங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் எல் அண்ட் டி குழுமத்துடன் கையெழுத்திட்டது. எல் அண்ட் டி ஹசிராவில் உள்ள அதன் ஆர்மர்டு சிஸ்டம்ஸ் வளாகத்தில், BAE சிஸ்டம்ஸ் ஹாக்லண்ட்ஸின் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு ஆதரவுடன் இந்த வாகனங்கள் தயாரிக்கப்பட உள்ளன. வாகனங்கள் பராமரிப்பு மற்றும் தொடர்ச்சியான தொழில்நுட்ப ஆதரவு
ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

விண்வெளித் துறையில், இந்தக் குழு ஏவுகணை வாகனக் கூறுகளைத் தயாரிக்கிறது. எதிர்காலத்தில் முழு அளவிலான ஏவுகணை உற்பத்திக்கு முன்னேற திட்டமிட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Detected Language English Tamil