TATA-வில் அடுத்த அதிர்ச்சி செய்தி..
டாடா டிஜிட்டல் நிறுவனம் அதன் புதிய தலைமை நிர்வாக அதிகாரி சஜித் சிவானந்தனின் கீழ், அதன் மூன்றாவது உத்தி மறுசீரமைப்புக்கு திட்டத்தை முன்னெடுத்துள்ளது. மொத்த வணிக மதிப்பு (GMV) சார்ந்த வளர்ச்சி திட்டத்தில் இருந்து குழு அளவிலான ஒருங்கிணைப்பு திட்டத்திற்கு மாற திட்டமிட்டுள்ளது.
ஜியோ மொபைல் டிஜிட்டல் சர்வீசஸின் முன்னாள் தலைவராக இருந்த சஜித் சிவானந்தன், இந்த ஆண்டு செப்டம்பரில் பொறுப்பேற்றார். இந்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, டாடா குழுமத்தின் சூப்பர் செயலி என்று அழைக்கப்படும் டாடா நியூவின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த, 50% க்கும் அதிகமான பணியாளர்களை நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டைட்டன், ஐஎச்சிஎல், டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா நுகர்வோர் தயாரிப்புகளின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் செயல்பாடுகளை மையப்படுத்தி டாடா டிஜிட்டல் மூலம் செயல்படுத்த டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ்கெட் மற்றும் குரோமாவின் செயல்பாடுகளை பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கைகளை சஜித் சிவானந்தன் முன்னெடுத்துள்ளார்.
பிக்பாஸ்கட்டை பொறுத்தவரை, அதன் எக்ஸ்பிரஸ் மளிகைப் பொருட்கள் பிரிவான BB Now மீது கவனம் குவிந்துள்ளது. அது Blinkit, Zepto மற்றும் Swiggy Instamart ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. பொருட்கள் விநியோகத்திற்கான நேரத்தை வெகுவாக குறைத்து, கடும் போட்டியை முன்னெடுத்துள்ளன.
இந்த போட்டிகளை சமாளிக்க பிக்பாஸ்கட் அதன் BB Now-இன் செயல் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் முழு-ஸ்டாக் மளிகை விநியோகச் சங்கிலியை இதற்கு பயன்படுத்துகிறது.
Croma-வில், லாபமற்ற கடைகளை மூடுவதன் மூலமும் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதிலும், Flipkart மற்றும் Amazon உடன் நேரடியாகப் போட்டியிடுவதற்குப் பதிலாக, ஒரு நேரடி விற்பனையாளராக தம்மை கட்டமைத்துள்ளது..
