ஓலா எலக்ட்ரிக் மர்மம்: என்னதான் நடக்குது???
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் மொத்த செலவுகளில் சுமார் 12% ஒதுக்கப்படாத செலவுகளாக காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அதன் ஸ்கூட்டர் மற்றும் பைக் வணிகத்தில் செயல்பாட்டு லாபத்தை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் பதிவு செய்யபட்ட அளவை விட இது இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒதுக்கப்படாத செலவுகள், செப்டம்பர் காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர இழப்பில் நான்கில் ஒரு பங்காகும். இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ஐந்தில் ஒரு பங்காக இருந்தது. இத்தகைய செலவுகள் சட்டப்படி செல்லுபடியாகும் கணக்கியல் நடைமுறை தான் என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கணக்குகளில் இது பிரதிபலிக்கும்.
ஓலா எலக்ட்ரிக் விஷயத்தில், ஒதுக்கப்படாத செலவுகள் என்பது அதன் இரண்டு பிரிவுகளான இரு சக்கர வாகனங்கள் மற்றும் மின்சார வாகன பேட்டரிகளுக்கு அல்லாத இதர வகை செலவினங்களைக் குறிக்கிறது.
இரண்டாவது காலாண்டில், மொத்த செலவுகள் ₹893 கோடியாகவும், ஒதுக்கப்படாத செலவுகள் இது ₹106 கோடியாகவும் இருந்தன. 2024-25 இரண்டாம் காலாண்டில் மொத்த செலவுகள் ₹1,593 கோடியாகவும், அதில் சுமார் 6% அதாவது ₹99 கோடி ஒதுக்கப்படாத செலவுகளும் இருந்தது.
ஓலா எலக்ட்ரிக்கின் ஒதுக்கப்படாத செலவுகள் போல அதன் போட்டி நிறுவனங்கள் எதிலும் இல்லை என்பதால், அதன் பங்கு விலைகள் குறைந்துள்ளன. நவம்பர் 6 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, புதன்கிழமை வரை இதன் பங்கு NSE இல் 19% குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் நிஃப்டி ஆட்டோ குறியீடு 4% உயர்ந்தது.
கார்ப்பரேட் நிர்வாகத்தில் கவனம் செலுத்தும் முதலீட்டு ஆலோசனை நிறுவனமான LotusDew Wealth இன் நிறுவனர் அபிஷேக் பானர்ஜி, பொதுவாக ஒதுக்கப்படாத செலவுகள் மொத்த செலவினங்களில் 5% ஐ தாண்டக்கூடாது என்றும் அதற்கு மேல் உள்ள எதையும் முதலீட்டாளர்கள் விரும்ப மாட்டார்கள் என்று கூறினார்.
கடந்த மாதம், ஓலா எலக்ட்ரிக்கின் நிறுவனர் மற்றும் தலைவர் பவிஷ் அகர்வால், இரு சக்கர வாகன வணிகம் செயல்பாட்டு ரீதியாக லாபகரமாகிவிட்டதாக கூறியிருந்தார்.
