ரிலையன்ஸுடன் கைகோர்த்த நடிகர் அஜித்குமார்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள்(FMCG) பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), நடிகர் அஜித் குமாரின் ரேசிங் அணி ஒரு பார்டனர்ஷிப்பை அறிவித்துள்ளது. இதன் மூலம் RCPL இன் முதன்மை ஊக்க பானமான காம்பா எனர்ஜி, அஜித் குமார் ரேசிங் அணியின் அதிகாரப்பூர்வ ஊக்க சக்தி கூட்டாளியாக அறிவிக்கப்படுகிறது.
உலகளாவிய விளையாட்டு போட்டிகளில், இந்திய நிறுவனங்களை ஆதரிப்பதில் RCPL இன் உறுதிப்பாட்டை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த கூட்டணி மூலம் இந்த இரண்டு பிராண்டுகளின் பிரபல்யமும் அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. மலிவான, தரமான தயாரிப்புகளை உருவாக்கி, வெளிநாடுகளில் இந்திய நிறுவனங்களின் திறமைகளை வளர்ப்பதில் RCPL இன் பங்களிப்பை இது உறுதி செய்வதாக சொல்லப்படுகிறது.
புகழ்பெற்ற நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமாரால் நிறுவப்பட்ட அஜித் குமார் ரேசிங், 2024 இல் தொடங்கப்பட்டதிலிருந்து முதன்மையான சர்வதேச போட்டிகளில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. 2025 க்ரெவென்டிக் 24H ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் இந்த அணி P3 அளவிலான வெற்றியை பெற்றது.
RCPL வெளியிட்ட அறிக்கையில், “இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, RCPL இன் முதன்மை ஊக்க பான பிராண்டான கேம்பா எனர்ஜி, அணியின் அதிகாரப்பூர்வ ஊக்க பான கூட்டாளியாக செயல்படும்” கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டாண்மை அஜித் குமார் ரேசிங்கிற்கு மிக உயர்ந்த மட்டத்தில் போட்டியிடவும், சர்வதேச அளவிலான விரிவாக்கத்தில் கவனம் செலுத்தவும் தேவையான உதவிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்த கூட்டணி உறுதிப்பாடு, சகிப்புத்தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை கொண்டாடுகிறது. இவை காம்பா எனர்ஜி மற்றும் அஜித் குமார் ரேசிங் இருவரும் பகிர்ந்து கொள்ளும் மதிப்புகள்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
