22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

செபி வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு..

இந்திய பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, டிஜிட்டல் தங்கம் மற்றும் தங்கம் தொடர்பான ஆன்லைன் முதலீடுகள் போன்ற ஒழுங்குபடுத்தப்படாத முதலீட்டு பொருட்களை வாங்குவதற்கு எதிராக முதலீட்டாளர்களை எச்சரித்துள்ளது.

முதலீட்டாளர்களுக்கு டிஜிட்டல் தங்கம் மற்றும் மின்-தங்க தயாரிப்புகள் போன்ற டிஜிட்டல் சொத்து பிரிவுகளை வழங்கும் ஆன்லைன் தளங்களை கண்காணிப்பதாக செபி தெரிவித்துள்ளது. நிஜ தங்கத்திற்கு பதிலாக இவை
மாற்று முதலீடாக சந்தைப்படுத்தப் படுகின்றன.

”சில டிஜிட்டல்/ஆன்லைன் தளங்கள் முதலீட்டாளர்களுக்கு ‘டிஜிட்டல் தங்கம்/மின்-தங்க பொருட்களில்’ முதலீடு செய்ய வாய்ப்பளிப்பதாக செபியின் கவனத்திற்கு வந்துள்ளது. நிஜ தங்கத்தில் முதலீடு செய்வதற்கு மாற்றாக டிஜிட்டல் தங்கம் சந்தைப் படுத்தப்படுகிறது,” என்று செபி தெரிவித்துள்ளது.

இந்த டிஜிட்டல் தங்கம் அல்லது மின்-தங்க பொருட்களில் செய்யப்படும் முதலீடுகளை பாதுகாக்க வழிமுறைகள் எதுவுமில்லை என்று செபி தெரிவித்துள்ளது. அவை பங்குகளாக அடையாளம் காணப்படவில்லை என்றும், கமாடிட்டி டிரைவேட்டிவ்ஸ் ஆக ஒழுங்குபடுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

“டிஜிட்டல் தங்கம்/இ-தங்கப் பொருட்களில் முதலீடு செய்வதற்கு பத்திரச் சந்தையின் கீழ் உள்ள முதலீட்டாளர் பாதுகாப்பு வழிமுறைகள் எதுவும் கிடைக்காது என்பதை முதலீட்டாளர்கள்/பங்கேற்பாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று செபி தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் முதலீட்டாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ETFகள், பரஸ்பர நிதிகள் போன்ற பல்வேறு ஒழுங்குபடுத்தப்பட்ட பிரிவுகள் மூலம், தங்கம் மற்றும் தங்கம் தொடர்பான கருவிகளில் முதலீடுகள் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் பாதுகாக்கப்படுகின்றன என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

செபியிடம் பதிவு செய்துள்ள இடைத்தரகர்கள் மூலம் இவற்றில் முதலீடு செய்யலாம் என்றும் இவை செபி விதிமுறைகளின் படி ஒழுங்கு படுத்தப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.

PhonePe, Google Pay, மற்றும் Paytm போன்ற நிறுவனங்கள், SafeGold, CaratLane, Tanishq மற்றும் MMTC-PAMP வலைத்தளங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன, ஆன்லைன் தங்க கருவிகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை இவை வழங்குகின்றன.

டிஜிட்டல் தங்க பொருட்களில் செய்யப்படும் முதலீடுகள் மீது ஜி.எஸ்.டி வரி, மூலதன ஆதாய வரி மற்றும் குறுகிய கால ஆதாய வரிகள் விதிக்கப்படுவதை முதலீட்டாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *