இந்தியாவில் வாகனங்களை உருவாக்க ஸ்டெல்லாண்டிஸ், டாடா மோட்டார்ஸ் திட்டம்
ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis) மற்றும் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு (Tata Motors Passenger Vehicles) ஆகியவை இணைந்து 50-க்கும் மேற்பட்ட உலகளாவிய சந்தைகளுக்கான வாகனங்களை உருவாக்கவும், அவற்றை இந்தியாவில் உற்பத்தி செய்யவும் உள்ளதாக திங்களன்று அறிவித்தன.
இந்த ஒப்பந்தமானது, இரு நிறுவனங்களின் 50:50 கூட்டு முயற்சியான ‘ஃபியட் இந்தியா ஆட்டோமொபைல்ஸ்’ (Fiat India Automobiles) மூலம் வாகனங்களை உற்பத்தி செய்வதை மையமாகக் கொண்டு கடந்த இரண்டு தசாப்தங்களாகத் தொடரும் உறவை மேலும் விரிவுபடுத்துகிறது. மேலும், உற்பத்தி, பொறியியல் மற்றும் விநியோகச் சங்கிலி ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆராய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக இது அமைந்துள்ளது.
இந்த நடவடிக்கை, ஸ்டெல்லாண்டிஸ் உடனான டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவின் கூட்டாண்மையை வெறும் உற்பத்தியைத் தாண்டி வாகன மேம்பாட்டுத் துறைக்கும் விரிவுபடுத்துகிறது. அதேவேளையில், உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையான இந்தியாவின் முக்கியத்துவத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது; ஏனெனில், வாகன உற்பத்தியாளர்கள் இந்தியாவை பொறியியல், தயாரிப்பு மேம்பாடு மற்றும் ஏற்றுமதிக்கான ஒரு மையமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்திய வாகன உற்பத்தியாளரின் வாகன வடிவமைப்பு கட்டமைப்பு (vehicle architecture) மற்றும் தொழில்நுட்பங்களை ஸ்டெல்லாண்டிஸ் பயன்படுத்திக்கொள்ளும். சர்வதேச சந்தைகளுக்கான வாகனங்களை உருவாக்க, தனது சொந்த பொறியியல் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டுத் திறன்களுடன் இந்தத் தொழில்நுட்பங்களையும் அது பயன்படுத்திக்கொள்ளும் என்று இந்நிறுவனங்கள் தெரிவித்தன.
