அதிர்ச்சியளித்த முன்னணி நிறுவனங்கள்..!!
பங்குச் சந்தையில் நிலவிய மந்தமான போக்கிற்கு மத்தியில், கடந்த வாரத்தில், சந்தை மதிப்பில் டாப் 10 உள்நாட்டு நிறுவனங்களில், எட்டு நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ரூ. 79,129.21 கோடி அளவுக்கு சரிந்தது. இதில் பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை பெரும் இழப்பைச் சந்தித்தன.
கடந்த வாரம், பிஎஸ்இ குறியீட்டு எண் 444.71 புள்ளிகள் அல்லது 0.51 சதவீதம் சரிந்தது.
டாப் 10 நிறுவனங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் லார்சன் & டூப்ரோ பங்குகள் மட்டுமே விலை உயர்ந்தன. அதே சமயம், ஹெச்டிஎஃப்சி வங்கி, பார்தி ஏர்டெல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) ஆகியவற்றின் சந்தை மதிப்பில் சரிவு ஏற்பட்டது.
பஜாஜ் ஃபைனான்ஸின் சந்தை மூலதனம் ரூ. 19,289.7 கோடி குறைந்து ரூ. 6,33,106.69 கோடியாக சரிந்தது.
பார்தி ஏர்டெல்லின் சந்தை மூலதனம் ரூ. 13,884.63 கோடி சரிந்து ரூ. 11,87,948.11 கோடியாகவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் சந்தை மூலதனம் ரூ. 7,846.02 கோடி குறைந்து ரூ. 8,88,816.17 கோடியாகவும் சரிந்தன.
இன்ஃபோசிஸ் தனது சந்தை மதிப்பில் ரூ. 7,145.95 கோடியை இழந்தது; அதன் மதிப்பு ரூ. 6,64,220.58 கோடியாக குறைந்தது.
டிசிஎஸ்-இன் சந்தை மதிப்பு ரூ. 6,783.92 கோடி குறைந்து ரூ. 11,65,078.45 கோடியாகவும், ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ. 4,460.93 கோடி சரிந்து ரூ. 15,38,558.71 கோடியாகவும் குறைந்தன.
எல்ஐசி-யின் சந்தை மதிப்பு ரூ. 1,201.75 கோடி குறைந்து ரூ. 5,48,820.05 கோடியாக சரிந்தது.
இருப்பினும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பு ரூ. 20,434.03 கோடி அதிகரித்து ரூ. 21,05,652.74 கோடியாக உயர்ந்தது
