11% லாபம் கண்ட Trent..
2025-26 இரண்டாவது காலாண்டில் டிரென்ட் லிமிடெட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 11% வளர்ச்சி பெற்று ரூ.377 கோடியாக உயர்ந்துள்ளது. காலாண்டு வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 16% அதிகரித்து ரூ.4,818 கோடியாக அதிகரித்துள்ளது.
காலாண்டிற்கான மொத்த செலவுகள் ரூ.4,367 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.3,915 கோடியாக இருந்தது. முக்கிய செலவுகளுக்கு முந்தைய செயல்பாட்டு லாபம் ரூ.478 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.461 கோடியாக இருந்தது. அதே சமயம் முந்தைய காலாண்டில் இது ரூ.555 கோடியாக இருந்தது.
நிதியாண்டு 2025-26இன் முதல் பாதியில், டிரென்ட்டின் ஒருங்கிணைந்த வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 18% அதிகரித்து ரூ.9,701 கோடியாக இருந்தது. அதே நேரத்தில் நிகர லாபம் 21% அதிகரித்து ரூ.798 கோடியாக இருந்தது. இது நிதியாண்டு 2025-26இன் முதல் பாதியில் ரூ.662 கோடியாக இருந்தது. மலிவு விலையில் ஃபேஷன் மற்றும் லைஃப் ஸ்டைல் பொருட்களின் விற்பனை தொடர்ச்சியாக அதிகரித்துள்ள நிலையில், இந்நிறுவனம் வலுவான வளர்ச்சியை தக்க வைத்துள்ளது.
ஜாரா பிராண்டின் உரிமையாளரான ஸ்பானிஷ் ஃபேஷன் நிறுவனமான இன்டிடெக்ஸுடனான அதன் கூட்டு முயற்சி நிறுவனமான இன்டிடெக்ஸ் ட்ரென்ட் ரீடெய்ல் இந்தியா (ITRIPL) இல், அதன் வசம் உள்ள மொத்த பங்குகளான 94,900 ஈக்விட்டி பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொன்றும் ரூ.1,000 முக மதிப்புள்ள 94,900 ஈக்விட்டி பங்குகளை திரும்பப் பெறுவதற்காக ITRIPL இலிருந்து நவம்பர் 5, 2025 தேதியிட்ட கொள்முதல் அறிவிப்பு கடிதத்தைப் பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பங்கு ஒன்றுக்கு விற்பனை விலை ரூ.15,421.85 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிரெண்டின் முழு பங்குகளையும் ITRIPL தோராயமாக ரூ.1,463 கோடிக்கு கொள்முதல் செய்யும் என்று மதிப்பிடுகிறது.
நேற்று டிரென்ட் பங்குகள் NSE இல் 1.3% குறைந்து ரூ.4,618 ஆக முடிவடைந்தது
