சைடஸ் லாபம் உயர்ந்தது எப்படி??
2025-26 இரண்டாவது காலாண்டில், சைடஸ் லைஃப் சைன்சஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 39% அதிகரித்து ₹1,259 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ₹911 கோடியாக இருந்தது.
உலகின் பல்வேறு பகுதிகளில் விற்பனை உயர்வு மற்றும் அந்நிய செலாவணி வருவாய் வெகுவாக அதிகரிப்பு ஆகியவற்றால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி வருவாய் முந்தைய ஆண்டில் ₹45 கோடியாக இருந்த நிலையில், தற்போது ₹414 கோடியாக வெகுவாக அதிகரித்துள்ளது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D) செலவினம் ₹482 கோடியாக, வருவாயில் 7.9%ஆக இருந்தது. காலாண்டிற்கான வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 17% அதிகரித்து, ₹6,123 கோடியாக இருந்தது. அமெரிக்கா மற்றும் இந்திய சந்தைகளில் ஃபார்முலேஷன் ரக மருந்துகள் விற்பனை வெகுவாக அதிரத்துள்ளதே இதற்கு காரணமாகும்.
செயல்பாட்டு லாப விகிதமும் கணிசமாக அதிகரித்துள்ளது. EBITDA 38% உயர்ந்து ₹2,014 கோடியாக இருந்தது. அதே நேரத்தில் லாப விகிதங்கள் ஒரு வருடத்திற்கு முன்பு 27.9% இலிருந்து 32.9% ஆக அதிகரித்துள்ளது.
”இந்த காலாண்டு முடிவுகள், உலகின் பல்வேறு பகுதிகள் மற்றும் துறைகளில் எங்களில் பன்முகப் படுத்தப்பட்ட வணிக மாடல் மற்றும் செயல்படுத்தும் திறன்களின் சக்தியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது,” என்று சைடஸ் லைஃப் சைன்சஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஷர்வில் படேல் கூறினார்.
காலாண்டு முடிவுகள் வெளியான பிறகு, சைடஸ் லைஃப் சைன்சஸ் நிறுவனத்தின் பங்குகள் நேற்று NSE இல் அதிகபட்சமாக ₹998 ஆக உயர்ந்து, பின்னர் ₹953.40 ஆகக் குறைந்தது.
