பணிநீக்கத்தில் தீவிரம் காட்டும் அமேசான்..
உலகின் மிகப் பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான அமேசான், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான (AI) செலவினங்களை அதிகரித்து வருவதால், சுமார் 14,000 பணியிடங்களை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது.
”இந்த பணியிடங்களை ரத்து செய்வதன் மூலம், அலுவலர்களின் எண்ணிக்கையை குறைத்து, நிர்வாக அடுக்குகளை குறைத்து, திறமையான ஊழியர்களுக்கு மாற்று வேலைகள் அளித்து, அதன் மூலம் வாடிக்கையாளர்களின் நிகழ் கால மற்றும் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்து, நிறுவனத்தை பலப்படுத்த உள்ளோம்” என்று என்று அமேசானின் மக்கள் அனுபவம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் மூத்த துணைத் தலைவர் பெத் கலெட்டி செவ்வாயன்று ஊழியர்களுக்கு அனுப்பிய மின்மடலில் தெரிவித்தார்.
அமேசனின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸி அமேசான் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு அனுப்பிய ஒரு குறிப்பாணையும் இந்த மின்மடலில் சேர்க்கப்பட்டுள்ளது.
வேலை குறைப்புகளால் பாதிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் தனிநபர்கள் பற்றிய விவரங்கள் அடுத்த செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட உள்ளது
