22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
சர்வதேச செய்திகள்

அமெரிக்காவுக்கு வந்த சோதனை

அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை செப்டம்பர் மாதத்தில் எதிர்பாராத விதமாகச் சுருங்கி, 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு இல்லாத அளவுக்குக் குறைந்திருந்ததாக, அமெரிக்க அரசாங்கத் தரவுகள் காட்டின. அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்த நிலையில், இறக்குமதிகள் மிகச் சிறிதளவு அதிகரித்ததே இதற்குக் காரணம்.

செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை 10.9 சதவீதம் குறைந்து 5,280 கோடி டாலராக குறைந்துள்ளது. இது கோவிட்-19 பெருந்தொற்று காலமான 2020-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குப் பிறகு ஏற்பட்ட மிகக் குறைந்த அளவிலான வர்த்தகப் பற்றாக்குறையாகும்.

ஏற்றுமதிகள் 3.0 சதவீதம் அதிகரித்து 28,930 கோடி டாலராக உயர்ந்த அதே வேளையில், இறக்குமதிகள் 0.6 சதவீதம் மட்டுமே அதிகரித்ததாக வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாத நடுப்பகுதிக்கு இடையில் ஏற்பட்ட மிக நீண்ட அரசாங்க முடக்கத்தால் ஒத்திவைக்கப்பட்ட அரசாங்கப் பொருளாதார அறிக்கைகளில் சமீபத்தில் வெளியாகின. இந்த வர்த்தகப் புள்ளிவிவரங்கள் இவற்றில் அடங்கும்.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவின் நிதி நிலை குறித்த முக்கியக் குறிகாட்டிகள் இல்லாமல், கொள்கை மற்றும் வணிக முடிவுகளை எடுக்க அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் சிரமப்பட வேண்டியிருந்தது.

அமெரிக்காவின் டஜன் கணக்கான வர்த்தக கூட்டாளி நாடுகள் மீதான இறக்குமதி வரிகளை டிரம்ப் உயர்தியிருந்தது, ஆகஸ்ட் மாதத்திலும் அமெரிக்காவின் இறக்குமதிகளைப் பாதித்தது.

திட்டமிடப்பட்ட வரி உயர்வுகளுக்கு முன்னதாக இறக்குமதியாளர்கள் சரக்குகளைச் சேமித்து வைக்க விரைந்ததால், வர்த்தகப் பரிவர்த்தனைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

டவ் ஜோன்ஸ் நியூஸ்வயர்ஸ் மற்றும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஆகிய நிறுவனங்கள் பொருளாதார வல்லுநர்களிடம் நடத்திய ஆய்வுகள், வர்த்தகப் பற்றாக்குறை 6200 கோடி டாலராக அதிகரிக்கும் என்று கூறியிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *