கத்தாரில் தடம் பதிக்கும் அசோக் லேலண்ட்..
அசோக் லேலண்ட் நிறுவனம், அல்-ஃபுட்டைம் குழும நிறுவனமான ஃபேம்கோ கத்தாருடன் கூட்டணி அமைத்து, கத்தாரில் தனது தடம் பதித்துள்ளது. 2024ல் சவுதி அரேபியாவில் ஃபேம்கோ கேஎஸ்ஏவுடன், அசோக் லேலண்டின் வெற்றிகரமாக கூட்டு முயற்சியின் அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஃபேம்கோ கத்தாருடன் அதன் கூட்டு முயற்சி மூலம், அசோக் லேலண்ட் கத்தாரின் உள்ளூர் வணிகங்கள் மற்றும் சமூகங்களின் தேவைகளுக்கு ஏற்ற வணிக வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளது. ‘பால்கன்’ மற்றும் ‘ஓய்ஸ்டர்’ பேருந்துகள், ‘பாஸ்’ மற்றும் ‘பார்ட்னர்’ இலகு ரக மற்றும் நடுத்தர லாரிகள் ஆகியவை இந்தத் தொகுப்பில் அடங்கும் என்று கூறியுள்ளது.
“மத்திய கிழக்கு பகுதியில் எங்கள் மீதான நம்பிக்கையை இந்த முயற்சி விரிவுபடுத்துகிறது. இந்த சந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் எங்களின் ஆழ்ந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது” என்று அசோக் லேலண்டின் சர்வதேச செயல்பாடுகளின் தலைவர் ஆர் ராஜேஷ் கூறியுள்ளார்.
“அசோக் லேலண்ட் நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு பிராண்ட். சவுதி அரேபியாவில் எங்கள் வெற்றியைத் தொடர்ந்து, உள்கட்டமைப்பு மற்றும் அதன் எதிர்காலத்தில் முதலீடு செய்யும் ஒரு நாடான கத்தாருக்கு அந்த தாக்கத்தை கொண்டு வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று அல்-ஃபுட்டைம் இண்டஸ்ட்ரியல் எக்யூப்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஸ் ஹம்தான் கூறியுள்ளார்.
தோஹா கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அசோக் லேலண்ட் அதன் புதிய மின்சார பேருந்து உட்பட அதன் முழு வணிக வாகன வரிசையையும் அறிமுகப்படுத்தியது
