ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் நாட்கோ..
தென்னாப்பிரிக்காவின் பழமையான மருந்து நிறுவனங்களில் ஒன்றான அட்காக் இன்கிராம் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை நவம்பர் 11 அன்று ஜோகன்னஸ்பர்க் பங்குச் சந்தையில் (JSE) இருந்து நீக்கும் பணியை நாட்கோ பார்மா வெற்றிகரமாக முடித்துள்ளது.
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட நாட்கோ பார்மா, அட்காக் இங்க்ராமின் 35.75 சதவீத பங்குகளை சுமார் $ 22.6 கோடிக்கு (ZAR 400 கோடி) வாங்கியிருந்த நிலையில், இந்த பட்டியல் நீக்கத்தை நிறைவு செய்துள்ளது.
“இந்த கையகப்படுத்தல் எங்கள் உலகளாவிய வளர்ச்சித் திட்டங்களில் ஒரு படியாகும். ஆப்பிரிக்கா மற்றும் அதற்கு அப்பால் உள்ள சமூகங்களின் சுகாதாரத் தேவைகளை சிறப்பாகச் செயல்படுத்த அதன் திறன்களை மேம்படுத்தும் அதே வேளையில், ஆட்காக் இன்க்ராமின் வளமான பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என்று நாட்கோ ஃபார்மாவின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜீவ் நன்னபனேனி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்த பிராந்தியத்திற்குள் வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாட்கோ ஃபார்மா நிறுவனம், அட்காக் இன்க்ராமிற்கு தற்போது உள்ள சந்தை மற்றும் நுகர்வோர் நம்பிக்கையைப் பயன்படுத்தி, தென்னாப்பிரிக்காவிலும் அதற்கு அப்பாலும் அதன் தயாரிப்புகளை விரிவுபடுத்தும்.
1891இல் தொடங்கப்பட்ட அட்காக் இன்க்ராம், தென்னாப்பிரிக்காவின் மருத்துவ சேவை துறையில் கடந்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக முக்கிய பங்காற்றி வருகிறது. இது பனாடோ, மைப்ரோடோல், எபி-மேக்ஸ், சிட்ரோ-சோடா மற்றும் அலெர்ஜெக்ஸ் போன்ற நம்பகமான மருந்து பிராண்டுகளுக்கு பெயர் பெற்றது.
ஜூலை 2025இல், அட்காக் இன்க்ராமின் சிறுபான்மை பங்குகளை வாங்குவதற்கு, நாட்கோ பார்மா ஒரு பங்கிற்கு ZAR 75 ($4.36) வழங்கியது. இது அக்டோபரில் அங்கீகரிக்கப்பட்டது. இந்தப் பங்கு கையகப்படுத்தல் நிறைவடைந்ததன் மூலம், நாட்கோ பார்மா தென்னாப்பிரிக்காவின் மருந்துகள் சந்தையில் வெற்றிகரமாக காலூன்றியுள்ளது

Nice