2 நிமிடத்தில் 200பேருக்கு வேலை ஸ்வாகா…
அமெரிக்காவில் மிகவும் பிரபலமான frontdesk என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் அண்மையில் தனது 200 ஊழியர்களை ஒரே கூகுள் மீட் காலில் வேலையை விட்டு நீக்கி அதிர்ச்சி அளித்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடி வீடுகளுக்கு பர்னிஷிங் செய்து பிரபலமடைந்த இந்த நிறுவனத்தை நடத்த போதுமான நிதி இல்லையாம். Zencity என்ற நிறுவனமும் 7 மாதங்களுக்கு முன்பு இதேபாணியில் தனது பணியாளர்களை வேலையைவிட்டு அனுப்பி அதிர்ச்சி அளித்திருந்தது. அமெரிக்கா முழுவதும் 1200 இடங்களில் 170 பில்டிங்குகளில் பணிகளை செய்து வந்தது. இந்ததிடீர் வேலைநீக்க அறிவிப்பால் முழுநேர பணியாளர்கள், பகுதிநேர பணியாளர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Jesse DePinto என்பவர் இந்த ஃபிரண்ட் டெஸ்க் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். இவரே தனது பணியாளர்களில் 200பேரை 2 நிமிடங்களில் வேலையைவிட்டு அனுப்பிவிட்டார். 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 26 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை திரட்டியது. கூடுதல் நிதி திரட்ட முடியாமல் நிறுவனத்தை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் அந்நிறுவனம் வேறு வழியில்லாமல் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.