ஜிஎஸ்டியில் என்ன புதுவரவு?
இந்தியாவில் தற்போது வரை 5,12,18,28% ஆகிய நான்கு பிரிவுகளில்தான் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் 5 ஆவதாக ஒரு ஜிஎஸ்டி வரி தயாராகி வருகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 35%என்ற புதிய வரி வரம்பை கொண்டுவர அமைச்சர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக புகையிலை மற்றும் மதுவகைகள் இந்த வரம்புக்குள் வர இருக்கிறது. 15 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட காலணிகள், 25 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட கைக்கடிகாரங்களுக்கு 18-ல் இருந்து 28%ஆக வரி உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பருத்தி மற்றும் ஆடைகளுக்கும் ஜிஎஸ்டி வரி உயர இருக்கிறது. ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஒற்றை ஜிஎஸ்டி வரிதான் உள்ளது. 5 முதல் 15 %க்குள் வரிகள் உள்ளன. இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் புதிதாக 35%ஜிஎஸ்டி என்பது அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் என்றும் வணிகங்களை முற்றிலுமாக சேதப்படுத்தும் என்றும் புகார்கள் உள்ளன. ஏற்கனவே ஜிஎஸ்டி வரி வசூல் ஆண்டுக்கு 20லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. இந்த நேரத்தில் 35 %வரி வரம்பு தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலவச பொருட்களுக்கு அரசியல்வாதிகள் வாக்குறுதிகள் கொடுப்பதை விட விவசாயம், கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாட்டுக்கு வாக்குறுதிகளை தரலாம். வேலைவாய்ப்பு மிகவும் மோசமாக உள்ள நிலையில் அதற்கு கவனம் செலுத்தலாம் என்றும் கிராமபுற மக்களுக்கு வருவாய் குறைவாக உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குளிர்பானங்கள் மற்றும் புகையிலைப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி உயர்த்தப்படுவதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவர். ஜிஎஸ்டி வரம்பை அதிகரிப்பதால் ரெடிமேட் ஆடைகளின் விலை 8% வரை உயரக்கூடும். ஜிஎஸ்டியை உயர்த்திக்கொண்டே சென்றால் சிறுகுறு தொழில்சாலைகளை மூடிவிட நேரிடம் அதே நேரம் 1லட்சம் பேர் வேலை இழக்க நேரிடும். மேற்குவங்கத்தில் கன்யாஸ்ரீ என்ற திட்டத்தின் மூலம் பெண்களுக்கான பள்ளிகள் திறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே நேரம் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி எண்ணிக்கையும் குறைவாக செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.