விரைவில் அமலாகிறது 5ஜி சேவை…
அண்மையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிவடைந்து உள்ள நிலையில், அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்க ஆயத்தம் ஆகி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவை தொடங்கப்படும் என மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் 5ஜி சேவை கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 5ஜி ஏலம் எடுத்த ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் மற்றும் அதானி நிறுவனங்கள் 17 ஆயிரத்து 876 கோடி ரூபாயை அரசுக்கு செலுத்தியுள்ளது என்றும் அவை சேவை வழங்குவதற்கான கட்டமைப்பு வசதிகளை தொடங்கி இருப்பதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 5ஜி சேவைக்கான கட்டணத்தை எந்த அளவில் நிர்ணயம் செய்ய உள்ளனர் என்று சாமானிய மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.