மாதம் 7 லட்ச ரூபா சம்பளம்; ஆனா நல்லா ஓட்டனும் !!!!
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது நெருக்கடியையும் பொருட்படுத்தாமல் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா காலகட்டத்திற்கு முன்பு இருந்த சம்பள அளவை விட கணிசமாக புதிய சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சம்பள நடைமுறை வரும் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது ஒரு மாதத்தில் 80 மணிநேரம் விமானம் ஓட்டினால் அந்த விமானிக்கு மாத சம்பளமாக 7 லட்சம் ரூபாய் அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயிற்சியாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்குமான சம்பளத்தை அதிகப்படுத்தவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. ECLGS திட்டத்தின்படி அந்த நிறுவனத்துக்கு கூடுதலாக 1ஆயிரம் கோடி ரூபாய் நிதி கிடைக்க உள்ள நிலையில் தனது ஊழியர்களுக்கு குறை வைக்க நிறுவனம் விரும்பவில்லை என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நிதி சிக்கன நடவடிக்கையாக அண்மையில் 80 விமானிகளை சம்பளம் இல்லாத 3 மாத விடுப்பில் அனுப்பிய அதே நிறுவனம் தற்போது ஊதிய உயர்வு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.