1600 கிலோமீட்டர் ஜெட்டில் வந்து வேலை பார்க்கும் சிஇஓ…
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியான பிரையன் நிக்கால் பதவியேற்க இருக்கிறார். இவரின் வீடு கலிஃபோர்னியாவில் உள்ளது. ஆனால் ஸ்டார் பக்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சியாட்டிலில் இருக்கிறது. இவருக்கு நிறுவனம் சார்பில் தனியார் ஜெட் வாகனம் அளிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 3 நாட்கள் 1600 கிலோமீட்டர் தூரம் பயணித்து அவர் அலுவலகம் செல்ல உள்ளார். இவருக்கு அடிப்படை சம்பளமாக ஆண்டுக்கு 13 கோடியே 42 லட்சம் ரூபாய் உள்ளது. இது மட்டுமின்றி பண போனசாக 3.6 மில்லியன் முதல் 7.2 மில்லியன் அமெரிக்க டாலர்களாக பணம் அளிக்கப்படுகிறது. மேலும் ஆண்டுக்கு ஒருமுறை வருடாந்திர ஈக்விட்டியாக 23 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அவருக்கு அளிக்கப்பட உள்ளது. நிக்காலுக்கு தற்போது 50 வயதாகிறது. கடந்த 2018-லும் அவர் இதுபோன்ற நெடுந்தூர பயணத்துக்கு சம்மதித்த்தார். ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் விற்பனை சரிந்ததை அடுத்து புதிய சிஇஓவாக பிரையன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் சரியாக பணியாற்றாத காரணத்தால் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அமெரிக்கா மற்றும் சீனாவில் விற்பநை சரிந்த நிலையில் நிக்கால் அங்கு களமிறங்கியுள்ளார்.