எரிபொருள் கட்டணம் நீக்கம்…
இந்தியாவில் கணிசமான விமானங்களை பயன்படுத்தி பெரிய அளவில் லாபம் பார்த்து வரும் நிறுவனமாக இண்டிகோ நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் வியாழக்கிழமை எரிபொருள் விலையை நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. atfஎனப்படும் விமான எரிபொருள் விலை அண்மையில் குறைந்ததை அடுத்து இந்த நடவடிக்கையை இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்தாண்டு அக்டோபரில் ஃபியூல் சார்ஜஸ் என்று கூடுதல் கட்டணத்தை வசூலிக்க ஆரம்பித்தது. சர்வதேச சந்தயைில் விமான எரிபொருள் விலை எப்படி உள்ளதோ அதற்கு தகுந்தபடி இந்த தொகையும் மாறுபடும் என்று அண்மையில் இண்டிகோ நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் அடிப்படையிலேயே தற்போது விலை குறைந்துள்ளதால் எரிபொருள் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் தனது பில்லில் இருந்து நீக்கியுள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளில் 300 முதல் ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் கட்டணமாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. ஜனவரி 1 ஆம் தேதி 3ஆவது முறையாக விமான எரிபொருள் கட்டணத்தை மத்திய அரசு குறைத்தது. ஒரு கிலோலிட்டருக்கு 4 விழுக்காடு அதாவது 1 லட்சத்து ஆயிரத்து 993 ரூபாயாக விமான எரிபொருள் கட்டணம் குறைந்துள்ளது. இது டெல்லியின் விலையாகும். கடந்த நவம்பரில் 6 விழுக்காடும், டிசம்பரில் 4.6 விழுக்காடும் விமான எரிபொருள் விலை குறைந்திருந்தது. ஒரு கிலோ லிட்டருக்கு கடந்த 3 மாதங்களில் 45 விழுக்காடு அளவுக்கு விலை குறைந்திருக்கிறது. இது 29,391 ரூபாய் குறைந்திருக்கிறது. விமான நிறுவனங்களுக்கு ஆகும் செலவில் 40விழுக்காடு எரிபொருளுக்காக மட்டுமே ஆகிறது. விமான எரிபொருள் மட்டுமின்றி வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையையும் பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதிகளில் மாற்றி அமைத்து வருகின்றன.