டாடா எடுத்த அதிரடி முடிவு!!!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உலகளவில் பல நாடுகளில் தங்கள் கார்களை விற்று கவனம் ஈர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க பங்குச்சந்தையான நியூயார்க் பங்குச்சந்தையில்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்கள் பங்குகளை பட்டியலிட்டிருந்தது. இந்நிலையில் வரும் ஜனவரி முதல் அமெரிக்க பங்குச்சந்தையில் இருந்து வெளியேறுவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்க டெபாசிட்டரி ஷேர் எனப்படும் பங்குகளில் அமெரிக்க முதலீடுகள் கடுமையாக குறைந்துள்ளதை அடுத்து இந்த முடிவை டாடா நிறுவனம் எடுத்துள்ளது. ஏடிஆர் திட்டத்தின்படி முதலீடு செய்தவர்கள் வரும் ஜனவரி 23ம் தேதியுடன் தங்கள் பங்குகளை சிட்டி வங்கியில்
அளித்து மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 944 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வந்தாலும், அமெரிக்காவில் சரிவை சந்தித்து வருகிறது.