அம்புஜா சிமெண்ட்ஸ் – செபியின் ஒப்புதலை பெற்ற அதானி குழுமம்
அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசிக்கான $3.8 பில்லியன் ஓப்பன் ஆஃபருக்காக செபியின் ஒப்புதலை அதானி குழுமம் பெற்றதாகத் தெரிகிறது.
இதன்படி அம்புஜா சிமெண்ட்ஸுக்கு ஒரு பங்கிற்கு ₹385 மற்றும் ACCக்கு ₹2,300 ஆஃபரை அதானி குழுமம் வழங்கியுள்ளது.
தோராயமாக ₹31,139 கோடி முதலீட்டில், இந்த இரண்டு திறந்த சலுகைகளும் இந்திய நிறுவன வரலாற்றில் மிகப்பெரிய ஓப்பன் ஆஃபராக இது அமையலாம்.
ஒரு அறிவிப்பின்படி, அதானி குடும்பத்திற்குச் சொந்தமான மொரிஷியஸைச் சேர்ந்த எண்டெவர் டிரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட், ₹19,880 கோடியை முதலீடு செய்து அம்புஜா சிமெண்ட்ஸின் 26% அல்லது 51.63 கோடி பங்குகளை பொதுமக்களிடமிருந்து ₹385க்கு வாங்கும். அத்துடன் ACC இன் 26% (4.89 கோடி பங்குகளை) ஒரு பங்கிற்கு ₹2,300 என்ற விலையில் ₹11,259 கோடிக்கு பொதுமக்களிடமிருந்து வாங்க முன்வந்தது.
இந்த ஓப்பன் ஆஃபருக்கு பிறகு, அம்புஜாவில் அதானியின் பங்கு 89.11% ஆகவும், ACC இல் 80.53% ஆகவும் உயரும்.