மேலும் பத்திரங்களை வெளியிடும் அதானி..
உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி அடுத்த சில நாட்களில் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பத்திரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளார். இது வரும் ஜூன் மாதத்திற்குள் நடக்கலாம் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. இது மட்டுமின்றி 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை கூட இது நீட்டிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே உள்ள கடன்களுடன் சேர்த்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் பத்திரங்களை வெளியிடலாம் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக வங்கிகளுடனும் ஆலோசனை நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுக்கு பிறகு அதானி குழுமம் அண்மையில் வெளியிட்ட பொதுப்பத்திர திட்டத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்திருந்தது. 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டதாக இந்த பத்திரங்கள் சந்தைக்கு வந்தன. 409 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுள்ள பத்திரங்கள் 18 ஆண்டுகள் சீனியர் பாதுகாக்கப்பட்ட பத்திரங்களாகவும் இது இருக்கிறது. இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை பெற இந்த பத்திர வெளியீட்டை அதானி செய்வதாக கூறப்படுகிறது. ஹிண்டன்பர்க் புகார்களை தொடர்ந்து அதானி குழுமம் மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம்ஆண்டில் மட்டும் கடனாக 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை வாங்க அதானி கிரீன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்திருக்கிறது.