ஆக்டிவ் நிலைக்கு சென்ற அகோரா..
ஹிண்டன்பர்க் என்ற அமெரிக்க நிறுவனம், இந்தியாவின் பெரிய தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் செபி தலைவர் மதாபி புரி புச் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. இந்த நிலையில் மதாபி தொடங்கி வைத்த அகோரா நிறுவனம் ஆக்டிவ் நிலைக்கு மாறியுள்ளது. மதாபி அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறி தற்போது செபியின் தலைவராக உள்ள நிலையில் பல ஆண்டுகளாக அப்படியே கிடந்த அகோரா நிறுவனம் தற்போது உயிர்த்தெழுந்துள்ளது. 2020-21 முதல் 23-24 ஆம் ஆண்டு வரை அகோரா என்ற நிறுவனம் 2.54 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. ஆனால் கடந்த நிதியாண்டில் அந்நிறுவனம் 14லட்சம் ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டியதாக கூறப்படுகிறது. 2017- ல் செபியின் முழு நேர உறுப்பினராக மதாபி கடந்த 2017-ல் நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் 2021-ல் இருந்து செபியின் தலைவராகும் பணிகளில் ஈடுபட்டார். பின்னர் அவர் 2022-ல் இருந்து தலைவராக இருக்கிறார். எந்த செயல்பாடுகளும் இல்லாத அகோரா நிறுவனத்துக்கு எப்படி பணம் வருகிறது என்று ஆராய்ந்தால், அந்நிறுவனதுக்கு ராயல்டி மற்றும் டெபாசிட் மூலம் வட்டியும், பணமும் வருகிறது. செபி மற்றும் அதன் தலைவர்தான் இந்த விவகாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் அகோரா நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதானி குழும பணத்தைத்தான் , செபியின் தலைவர் மதாபியின் கணவர் அதிகளவில் முதலீடு செய்திருப்பதாக ஹிண்டன்பர்க் அறிக்கை மறைமுகமாக சாடியது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அரசியல் களத்திலும் இதே பிரச்சனை எதிரொலித்தது.