ஒரு குடைக்குள் விமானம்!!!!
விஸ்தாரா, ஏர் ஏசியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய விமான நிறுவனங்களை ஏர் இந்தியாவின் கீழ் கொண்டு
வரும் முயற்சியை டாடா சன்ஸ் குழுமம் தொடங்கியுள்ளது. எல்லா நிறுவனங்களையும் ஏர் இந்தியாவின் கீழ் கொண்டு வரும் பட்சத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம் சந்தை மதிப்பில் இரண்டாவது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஏர் இந்தியாவின் கீழ் விமான நிறுவனங்கள் இணைக்கும் முயற்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களிலோ,அல்லது ஒரு வாரத்திலோ வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பு முடிந்த பிறகு தற்போது இயங்கி வரும் விஸ்தாரா என்ற பிராண்டையே அழித்துவிட்டு ஏர் இந்தியாவின் கீழ் விமானங்கள் இயக்கப்பட உள்ளது. வெறும் 20 % பங்குகளை மட்டும் வைத்துள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவின் கீழ் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா இந்தியா நிறுவன பங்குகள் மலேசியன் ஏர்லைன்சுடன் இணைக்கப்பட்டது. இதற்கான இறுதிகட்ட பணிகள் இன்னும் ஓராண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே நிறுவனத்தின் கீழ் விமான நிறுவனங்கள் வரும்பட்சத்தில் இயக்க கட்டணம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஸ்தாராவில் 51% பங்கு டாடாவிடமும், 49 %பங்குகள் சிங்கப்பூர் ஏர் லைன்சிலும் உள்ளன.