15%போலி ஆவணங்கள் : ஜெர்மன் தூதர்

ஜெர்மன் பல்கலைகழகங்களில் சேர மாணவர்கள் சில போலியான ஆவணங்களை கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டு தூதர் பிலிப் அக்கெர் மென் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெர்மனியில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர இந்திய மாணவர்களில் 15 விழுக்காடு பேர் போலி ஆவண உதவியுடன் தங்கள் நாட்டுக்கு வருவதாக கூறினார்.
போலியான ஆவணங்களை அதிகாரிகள் கண்டுபிடித்து தடுத்து நிறுத்துவது அவசியம் என்றும் கூறியுள்ளார். கொரோனா தாக்கம் முடிந்துள்ள சூழலில் மாணவர்கள் ஜெர்மானிய பல்கலைக்கழகங்களில் சேர ஆர்வம் அதிகரித்து உள்ளது. தற்போதுள்ள விசா நடைமுறையை எளிமைப்படுத்தி மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் பிலிப் கூறியுள்ளார்