எக்சைடு, அமரராஜா நிறுவன பங்குகள் ஏற்றம்..
மார்ச் 26 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகளில் எக்சைடு இன்டஸ்ட்ரீஸ், அமரராஜா எனர்ஜி நிறுவன பங்குகள் 5.1விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சார வாகன பேட்டரிகள் தயாரிப்புக்கு உதவும் சில பொருட்கள் மீதான வரி முற்றிலும் 0 என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து பேட்டரி தயாரிப்பில் முன்னணியில் உள்ள சில நிறுவனங்களின் பங்குகள் கிடுகிடுவென உயர்ந்தன. நேற்று காலை 11 மணியளவில் எக்சைடு நிறுவன பங்குகள் 1.28 விழுக்காடும், அமரராஜாஎனர்ஜி நிறுவன பங்குகள் 1.76 விழுக்காடும் ஏற்றம் கண்டன. உள்ளூர் உற்பத்தியாளர்கள் நலன் கருதி இறக்குமதி வரியை மத்திய அரசு முற்றிலுமாக எடுத்துவிட்டதாக நிதியமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியா மீது வரும் 2 ஆம் தேதி முதல் பதில்வரியை அமெரிக்கா சுமத்த உள்ள நிலையில், சில பொருட்களின் விலையையும், இறக்குமதி வரியையும் கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு குறைத்துள்ளது மத்திய அரசு. மேலும் பதில்வரியை எந்தெந்த பொருட்கள் மீது குறைப்பது என இருநாட்டு அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கின்றனர். கடந்த வாரம் நடந்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில் மூலப்பொருட்களின் விலையை குறைப்பதற்கும், உள்ளூர் உற்பத்தியாளர்களை காப்பாற்றவும் சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. அதனை ஏற்று இந்திய அரசு தற்போது விலைகளை குறைத்துள்ளது.
