போயிங் விமானம் ஒன்றை வாங்கினார் அம்பானி..எவ்ளோ தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமத்தலைவருமான முகேஷ் அம்பானி, போயிங் 737 மேக்ஸ் 9 என்ற புதிய விமானத்தை வாங்கியுள்ளார். அல்ட்ரா லாங் வகையைச் சேர்ந்த இந்த விமானம் பிஸினஸ் ஜெட் என்றும் இதன் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய விமானம் மட்டுமின்றி அவர் வசம் ஏற்கனவே 9 தனியார் ஜெட் விமானங்கள் உள்ளன. போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானம் அண்மையில் இந்தியா வந்தடைந்ததுடன், அதன் சோதனையும் வெற்றிகரமாக நடந்துள்ளது. அப்படி அந்த விமானத்தில் என்னதான் இருக்கு? முகேஷ் அம்பானி வாங்கியுள்ள புதிய போயிங் விமானத்தில் ஸ்விட்சர்லாந்துக்கு எடுத்துச்சென்று தேவையான அளவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி ஸ்விட்சர்லாந்துக்கு சென்ற இந்த விமானத்தை விமானிகள் சோதித்துப்பார்த்தனர்.
பாசெல், ஜெனீவா, லண்டன் லுடன் விமானநிலையங்களில் இந்த விமானம் தரையிறங்கியது. 6,234 கிலோமீட்டர் தூரம் சோதித்த பிறகு கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி இந்த விமானம் டெல்லிக்கு வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் CFMI LEAP 1B என்ற இரண்டு இன்ஜின்கள் உள்ளன. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 11,770 கிலோமீட்டர் எளிதில் பறக்கும் வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 ஹெலிகாப்டர்களும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. டவ்ஃபின் ஹெலிகாப்டர்கள் எளிதில் பறக்கும் திறன் பெற்றவை, ஸிகோர்ஸ்கை எஸ்76 என்ற ஹெலிகாப்டரும் குறுகிய தூர பயணத்துக்கு மிகவும் உதவும் ஒரு ஹெலிகாப்டர் என்று கூறப்படுகிறது.