ஆக்ஸிஸ் பைனான்ஸை வாங்க ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்..

இந்தியாவின் 3 ஆவது பெரிய தனியார் வங்கியாக உள்ளது ஆக்சிஸ் வங்கி. இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஆக்ஸிஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தை விற்கவும் முதலீடுகளை ஈர்க்கவும் அந்த நிறுவனம் அண்மையில் அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில் காரில்அன்ட் அட்வென்ட் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் ஆக்சிஸ் பைனான்சில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. ஆக்சிஸ் ஃபைனான்ஸ் நிறுவனம் தனது 50 விழுக்காடு பங்குகளை விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆக்சிஸ் வங்கியின் பங்குகளை விற்க மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தை ஆக்சிஸ் வங்கி நாடியுள்ளது. டெமாசெக் நிறுவனமும் இந்த நிதி நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் 12,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்டவை. ஆக்சிஸ் நிறுவனத்தை வாங்கும் முடிவு ஆரம்பகட்டத்திலேயே இருப்பதாகவும் இன்னும் 6 முதல் 9 மாதங்கள் வரை கூட இறுதி முடிவு எடுக்க ஆகலாம் என்று கூறப்படுகிறது. ஆக்சிஸ் பைனான்ஸ் நிறுவனத்தில் பணத்தை செலுத்துவதில் ரிசர்வ் வங்கிக்கு கருத்து ஒற்றுமை இல்லை என்று கூறிய தலைமை செயல் அதிகாரி அமிதாப் சவுத்ரி, கடந்த 2022 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் ஆயிரத்து 100 கோடி ரூபாயை ஃபைனான்ஸ் பிரிவில் முதலீடு செய்ததாகவும் கூறினார். கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆக்ஸிஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 39,700 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டுதான், சொத்தை அடமானமாக பெற்று சில்லறை கடன்களை வழங்க ஆரம்பித்தது.