மின்சார 3 சக்கர வாகனங்களை களமிறக்கும் பஜாஜ்..

இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் குறிப்பாக இருசக்கர வாகனங்கள் பிரிவில் பிரபலமான நிறுவனமாக வலம் வருகிறது பஜாஜ். இந்த நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன உற்பத்தியும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தனது புதிய மின்சார 3 சக்கர வாகனமான் பஜாஜ் கோகோவை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த 4 முதல் 5 மாதங்களில் மேலும் புதிதாக 4 மாடல்களை அறிமுகப்படுத்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் 3சக்கர வாகனங்கள் சந்தையில் 10 விழுக்காடை பிடிப்போம் என்று அந்நிறுவனத்தின் இன்ட்ரா சிட்டி வணிகப்பிரிவு தலைவர் சமர்தீப் சுபந்த் தெரிவித்துள்ளார். மின்சார ஆட்டோக்கள் பிரிவில் மஹிந்திரா நிறுவனம் முன்னோடியாக உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் பங்கு 39 விழுக்காடாக உள்ள நிலையில் , இதற்கு அடுத்த இடத்தில் பஜாஜ் ஆட்டோ உள்ளது.
மின்சார 3 சக்கர வாகன பிரிவில் கடைசியில் உள்ளே நுழைந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு பிடிக்கும் வகையில் ஆட்டோவை உற்பத்தி செய்திருப்பதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மஹிந்திரா, பியாஜியோ, யூலர், மோன்ட்ரா ஆகிய நிறுவனங்கள்பஜாஜ் நிறுவனத்துக்கு கடும் நெருக்கடி அளிக்கின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டுதான் மின்சார ஆட்டோக்களை பஜாஜ் அறிமுகப்படுத்தியது. கடந்த நிதியாண்டில் மட்டும் 12ஆயிரத்து 231 மின்சார ஆட்டோக்களை பஜாஜ் நிறுவனம் விற்றுள்ளது. பஜாஜ் கோகோ என்ற பிராண்டின் கீழ் மேலும் 3 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது