பங்குச்சந்தையில் பெரிய வீழ்ச்சி..
இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 26ஆம் தேதி நஷ்டத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 353புள்ளிகள் சரிந்து 72,790புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 90புள்ளிகள் சரிந்து 22,122 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தையில்P ower Grid Corp, L&T, Adani Enterprises, BPCL , Tata Consumer. ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல் Asian Paints, Hindalco Industries, Apollo Hospitals, Divis Labs and Titan Compan ஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 80ரூபாய் குறைந்து விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 5810 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 480 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை, கிராமுக்கு40 பைசா குறைந்து 76 ரூபாய் ஆக உள்ளது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, 400 ரூபாய் சரிந்து 76ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.