பங்குச்சந்தையில் பெரிய வீழ்ச்சி ..
ஆகஸ்ட் 13 ஆம் தேதி புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 692 புள்ளிகள் குறைந்து 78ஆயிரத்து 956 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 208 புள்ளிகள் குறைந்து 24ஆயிரத்து 139 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. Titan Company, Apollo Hospitals, Dr Reddy’s Labs, Tata Consumer, HCL Tech உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன. Shriram Finance, BPCL, HDFC Life, HDFC Bank, Bajaj Finance உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை கண்டன. வங்கிகள், ஆற்றல், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஊடகம் , டெலிகாம் நிறுவன பங்குகள் 1 விழுக்காடு சரிவை கண்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.அதன்படி, செவ்வாய்க்கிழமை ஒரு கிராம் தங்கம் 95 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 565 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 760 ரூபாய் உயர்ந்து 52 ஆயிரத்து 520 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது
வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 88 ரூபாய் 50 காசுகளாக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து 88ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.