20% சரிந்த பிட்காயின் மதிப்பு..

கிரிப்டோ கரன்சி எனப்படும் சந்தையில் பிட்காயின் என்ற நிறுவனத்தின் மதிப்பு 20 விழுக்காடு சரிந்தது. கடந்த ஜனவரியில் புதிய உச்சமாக 1லட்சத்து 9 ஆயிரத்து 350 டாலர் என்ற அளவுக்கு விற்கப்பட்ட பிட்காயின், தற்போது அதன் மதிப்பில் 20 விழுக்காடை சந்தித்து உள்ளது. இதனால் ஒட்டுமொத்த கிரிப்டோ சந்தையும் சரிவை கண்டுள்ளது. கடந்த 27 ஆம் தேதி கிரிப்டோ சந்தையில் மட்டும் 300 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தொகை குறைந்து முதலீட்டாளர்களை அதிர வைத்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது அழுத்தம் கொடுத்து வருவதே பிட்காயின் சரிவுக்கு முக்கிய காரணமாக நிபுணர்கள் கூறுகின்றனர். பியர் மார்கெட் எனப்படும் பின்னடைவுக்கு முக்கியமாக உலகளாவிய பிரச்சனைகள் கூறப்படுகிறது. 4 பில்லியன் அமெரிக்க டாலர் வரை கிரிப்டோ கரன்சி விற்பனை நடக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 85,000 டாலருக்கு மேல் சென்றால் கிரிப்டோ சந்தை மீளும் என்றும், அதே நேரம் 74,000 டாலராக விழும்பட்சத்தில் சந்தையில் மேலும் சரிவு தொடரும் என்பதே நிபுணர்களின் எச்சரிக்கையாக இருக்கிறது. அடுத்து வரும் வாரங்களில், அமெரிக்க முதலீட்டாளர்கள் அதிகரிக்க வேண்டும் என்று கூறும் நிபுணர்கள் உலகளாவிய சூழல் மேம்படும் வரை முதலீட்டாளர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.