மேலும் 20 %சரிவு காத்திருக்கிறது..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த பதில் வரி காரணமாக அமெரிக்க சந்தைகள் பெரிய வீழ்ச்சி கண்ட நிலையில், இன்னும் 20 விழுக்காடு வரை சந்தை சரிய வாய்ப்புள்ளதாக பிளாக்ராக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லாரி ஃபிங்க் எச்சரித்துள்ளார்.
நியூயார்க்கில் உள்ள பொருளாதார கிளப்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய லாரி.,அமெரிக்காவில் தற்போது மந்தநிலை நிலவுகிறது என்றார்.
டிரம்பின் இந்த அறிவிப்பால் விலைவாசி தாறுமாறாக உயரும் என்றும் அவர் எச்சரித்தார். அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை எஸ்அன்ட்பி500 பங்குச்சந்தை 0.9விழுக்காடு ஏற்றம் கண்டது. கடந்த பிப்ரவரியில் புதிய உச்சம் தொட்ட அமெரிக்க சந்தைகள் அதற்குள்ளாக 20 விழுக்காடு வரை சரிவை கண்டுள்ளன. பங்குச்சந்தைகள் சரிந்தாலும், அமெரிக்க கடன் பத்திரங்களான 10 ஆண்டுகள் பத்திரங்கள் உயர்ந்தன. அண்மையில் ஏற்பட்ட சரிவு கூட அமெரிக்க பங்குச்சந்தைகளில் நீண்டகால முதலீட்டுக்கு சிறந்த இடமாக மாற்றியுள்ளதாக ஃபிங் தெரிவித்தார். அமெரிக்காவில் வசிக்கும் மக்களில் 62 விழுக்காடு மக்கள் ஈக்விட்டிகளில் முதலீடு செய்திருக்கும் நிலையில், பங்குச்சந்தைகளில் சரிவை அவர்கள் மிக விரைவாக சந்திக்க இருப்பதாக ஃபிங் எச்சரித்துள்ளார். அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி ஓராண்டில் 4 அல்லது 5 முறை கடன்கள் மீதான வட்டி குறைக்காது என்றும் பிங்க் தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி சந்தை மூலதனம் கொண்ட சந்தை என்ற இடத்தை அமெரிக்கா இழக்கவும் வாய்ப்புள்ளதாக ஃபிங் எச்சரித்தார். தனது நிறுவனமும் ஹாங்காங்கை அடிப்படையாக கொண்ட சிகே ஹட்சிசன் நிறுவனத்துக்கும் இடையே உள்ள ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும், இதன் முடிவுக்காக காத்திருப்பதாகவும் ஃபிங் தெரிவித்தார்.