பெரிதாய் களம் இறங்கும் bmw!!!
உலகளவில் மிகப்பிரபலமான கார்நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது பிஎம் டபிள்யூ நிறுவனம். இந்த நிறுவனத்தில்
அண்மையில் வெளியான எக்ஸ் ரக மாடல் கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன
இந்த நிலையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் புதிய மின்சார வாகன உற்பத்தியை தொடங்குகிறது
2030ம் ஆண்டுக்குள் மின்சார வாகனத்தில் எக்ஸ் ரக கார்களில் 6 புதிய மாடல்களை பிஎம்டபிள்யூ வெளியிட திட்டமிட்டுள்ளது
இதற்காக 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்,முதலீடு செய்யப்பட்டுள்ளது
ஸ்டான்பர்க் பகுதியில் உள்ள என்விஷன் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள பிஎம்டபிள்யூ பேட்டரி செல் போக்டரியை துவங்க உள்ளது.
இந்த குறிப்பிட்ட ஆலையில் மட்டும் 30 ஜிகா வாட் அளவுக்கு மின் ஆற்றல் சேமிப்பு செய்ய முடியும், புதிய வசதியின் மூலம்
நட்சத்திர காரை 20 விழுக்காடு விரைவாக சார்ஜ் செய்துகொள்ள முடியும்,மேலும் 30 விழுக்காடு அதிக செயல்திறனை பெற முடியும்
மின்சார கார்களை உற்பத்தி செய்வதன்மூலம் கரியமில வாயு வெளியேற்றம் 60 விழுக்காடு குறைகிறது.