கடன் வாங்கும் அம்பானி?? …..
முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 12 ஆயிரத்து 400 கோடி ரூபாயும்,ஜியோ நிறுவனம் 20 ஆயிரத்து 600 கோடி ரூபாயும் வெளிநாட்டு கடன்தரும் நிறுவனங்கள் மூலம் கடன் வாங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
5ஜி செல்போன் சேவையை அண்மையில் ஜியோ தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நிறுவன விரிவாக்கத்துக்கு இந்த கடன் வாங்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பார்க்கிளேஸ், எச்.எஸ்.பி.சி,MUFGவங்கிகளிடம் கடன் வாங்குவது குறித்துபேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் அங்கீக்கரிக்கப்பட்டுள்ள கடன் அளவான SOFRஐவிட 150 அடிப்படை புள்ளிகள் வரை அதிகமான வட்டிக்கு 5 ஆண்டுகளுக்கு இரு நிறுவனங்களும் கடன் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது போக இரண்டு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏற்றுமதி முகமைகளின் மூலமாகவும் கடன் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசின் பங்கு மதிப்பு 2 ஆயிரத்து 433.25 ரூபாயாக இருந்தது.
மிகப்பெரிய லாபத்தில் இயங்கி வரும் ரிலையன்ஸ் குழுமம் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அதிக வட்டி விகிதத்தில் கடன்வாங்குவது பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.