தம்பி நீ திருந்தவே மாட்டியா?? Fineஐ கட்டு!!!
உலகளவில் ஆன்டிராய்டு இயங்குதளத்தின் மூலம் கோடி கோடியாக சம்பாதிக்கும் கூகுள் நிறுவனம் தனது ஆதிக்கத்தை
தவறாக பயன்படுத்துவதாக செல்போன் தயாரிப்பாளர்கள் இந்திய போட்டி ஆணையத்தில் முறையிட்டனர்.
இதனை விசாரித்த இந்திய போட்டி ஆணையம்,கூகுளை கடுமையாக சாடியதுடன், அபராதமாக ஆயிரத்து 337 கோடி ரூபாயை
செலுத்த கடந்த 20ம் தேதி அறிவித்தது.
உலகம் முழுக்க இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இது தொடர்பான மற்றொரு வழக்கிலும் கூகுளுக்கு எதிராக
புதிய உத்தரவை சிசிஐ எனப்படும் இந்திய போட்டி ஆணையம் அறிவித்துள்ளது கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள பேமண்ட் கொள்கைகளை கூகுள் தவறாக வடிவமைத்துள்ளதாக வழக்கு நடந்தது. இதனை விசாரித்த இந்திய போட்டி ஆணையம் ஆப் டெவலப்பர்களை பில்லிங்குக்கு 3ம் நபரை நாடக்கூடாது என நிர்பந்திக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பாக கடந்த 2020ம் ஆண்டே இந்திய போட்டி ஆணையம் கூகுளை கண்டித்திருந்த நிலையில் அதனை
அலட்சியப்படுத்தும் வகையில் கூகுள் செயல்பட்டதாக கூறப்படுகிறது.இதனிடையை அடுத்தடுத்த கசையடிகளை பெற்று
வரும் கூகுள் நிறுவனத்தில் இருந்து இந்த அபராதங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.பிரச்சனை எங்கு நடந்தது
என்பது குறித்து ஆராயப்படும் என்று கூகுள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.