22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

போனஸ் குறித்து வரும் 30 ஆம் தேதி பேச்சு..

இந்திய பங்குச்சந்தைகளில் முக்கியமான பங்குச்சந்தையும், அதிக முதலீடுகளை ஈர்க்கும் சந்தையுமாக திகழ்கிறது மும்பை பங்குச்சந்தை.
இந்த பங்குச்சந்தையின் இயக்குநர்கள் கூட்டம் வரும் 30 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் போனஸ் பங்குகள் அளிப்பது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. அப்படி போனஸ் பங்குகள் அளிக்கப்பட்டால், கடந்த 3 ஆண்டுகளில் மும்பை பங்குச்சந்தை அளிக்கும் இரண்டாவது போனஸாக இது அமையும். கடந்த 2022-ல் இதுபோன்ற ஒரு அறிவிப்பும் வெளியாகியிருந்தது. நிதி சார்ந்த பணிகள் இருப்பதால் வரும் ஏப்ரல் 1 வரை வணிக சாளரம் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் மும்பை பங்குச்சந்தையின் பங்குகள் 103.6விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7.91 விழுக்காடு ஏற்றத்தை இந்த பங்குச்சந்தை கண்டுள்ளது.
அதே நேரம் தேசிய பங்குச்சந்தையின் பங்குகள் 17.89 விழுக்காடு கடந்த 3 மாதங்களில் குறைந்துள்ளது. ஆனால் கடந்த 6 மாதங்களில் மட்டும் அந்த பங்குச்சந்தையின் பங்குகள் 16.59 விழுக்காடு உயர்ந்து இருக்கிறது. 14 நாட்கள் ரிலேடிவ் பல குறியீடு என்ற விகிதம் 49.9விழுக்காடாக உள்ளது. இது சமநிலையையே குறிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *