ஆஃபிசுக்கு வர முடியுமா? முடியாதா???…
டிசிஎஸ் நிறுவனம் அண்மையில் தங்கள் பணியாளர்கள் வாரத்தில் 3 நாட்கள் கட்டாயம் அலுவலகம் வர
அறிவுறுத்தி அதன்படி பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் பல ஐடி நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களுக்கு
இதே நிர்பந்தத்தை அளித்து வருகின்றனர். அந்த நிறுவனத்தில் 2025ம் ஆண்டுக்குள் 25 விழுக்காடு பணியாளர்கள்
மட்டுமே சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள் என்ற திட்டம் பெருந்தொற்று காலத்தில் டிசிஎஸில்
அறிமுகப்படுத்தியது. ஆனால் எல்லா பணியாளர்களையும் மீண்டும் அலுவலகத்துக்கு அழைப்பதன் மூலம்
25*25 திட்டம் அமலாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது நிறுவனங்களுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கும் மூன்லைட்டிங் மற்றும் பணியாளர்கள் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் விகிதம் அதிகரிப்பு ஆகிய காரணிகளால் சில ஐடி நிறுவனங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன. கட்டாயம் அலுவலகத்துக்கு வரவேண்டும் என நிர்பந்தித்த அலுவலகங்களே வேண்டாம் என்று நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்றும் பணிகளை ஐடி நிறுவன பணியாளர்கள் நாடத் தொடங்கியுள்ளனர். டிசிஎஸ் நிறுவனத்தை தொடர்ந்து விப்ரோ நிறுவனமும் தனது பணியாளர்களை வாரத்தில் நான்கு நாட்கள்
அலுவலகத்துக்கு வரலாம் என்று அழைத்துள்ளனர் விப்ரோ நிறுவனம் தனது பணியாளர்களை இணைத்திருப்பதை ஹைப்ரிட் மாடல் என்று வர்ணிக்கின்றனர்.
கடந்த 30 மாதங்களில் 1 லட்சம் பேர் விப்ரோ நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளதாக கூறும் நிறுவனம் 10 விழுக்காடு
பணியாளர்கள் மட்டுமே அலுவலகம் வந்துள்ளதாகவும், பெரும்பாலான பணியாளர்கள் 2 மற்றும் 3ம் நிலை நகரங்களில்
வசித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனம் தனது பணியாளர்களை கட்டாயப்படுத்தவில்லை என்றாலும் விரைவில் அவர்களும்
அலுவலகங்களுக்கு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
எச்சிஎல் நிறுவனமும் தனது பணியாளர்களை வாரத்துக்கு 3 முறை அலுவலகம் வர அறிவுறுத்தியுள்ளது.