தட்டி தூக்கிய இன்போசிஸ்..
பிரபல குளிர்பான நிறுவனமான கோகாகோலா நிறுவனம் அண்ணையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்தது. அதில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. முதலில் இந்த டீல் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு போடப்பட்டிருந்தது. தற்போது 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள துணை பார்ட்னராக இன்போசிஸ் இந்த சேவையில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கிளவுடு மைக்ரேஷன் திட்டத்துக்கு இன்போசிஸ் இனி வேலை பார்க்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த டீலை முடித்துக்கொடுத்தால் இன்போசிஸ் நிறுவனத்துக்கு 27 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக யூரோ பசிபிக் பிராந்தியத்திற்கு மட்டும் 27 மில்லியன் டாலரும், பிற பகுதிகளுக்கும் சேர்த்து 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை அந்நிறுவனம் பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. யூரோ பசிபிக் பிராந்தியத்தில் கிளவுடு சேவைகளுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அசூர் நிறுவனத்துடன் 6 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது கூடுதலாக 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள துணை ஆணையை இன்போசிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அசூர் ஓபன் ஏஐ சேவைகள் மூலம் புதிய ஜெனரேட்டிவ் ஏஐ கேஸ்களை அனைத்து வகை வணிகத்திலும் பயன்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும், இன்போசிஸ் நிறுவனமும் இணைந்து பல பணிகளை செய்வதாக அறிவித்துள்ளனர். செயல்திறனை அதிகரிக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தவும், வருவாய் உயர்வுக்கும், வியாபார பரிமாற்றத்துக்கும் உதவும் என்றும் இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.