22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
கருத்துகள்செய்திதொழில்நுட்பம்

EV சார்ஜிங் -நேரக் கட்டண முறை அறிமுகம்

மின்சார வாகனங்களை (EV) சார்ஜ் செய்வதற்கான ’நேரக் கட்டண முறை’யை அறிமுகப்படுத்த டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆலோசனைகள் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளன, மேலும் ஒரு வருடத்தில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022-2025 ஆம் ஆண்டிற்கான EV சார்ஜிங் உள்கட்டமைப்பின் செயல் திட்டம், டிஸ்காம்களுடன் இணைந்து நேர கட்டணங்கள் மற்றும் நிர்வகிக்கப்பட்ட சார்ஜிங் போன்ற நடவடிக்கைகளை ஒழுங்குமுறை ஆணையத்திற்கு பரிந்துரைக்கும் என்று டெல்லி அரசு கூறியுள்ளது.

EV விற்பனை அதிகரித்து வரும் நேரத்தில் நுகர்வோரை ஊக்குவிக்கும் மற்றும் சுமையைக் குறைக்கும் திட்டங்கள் வந்துள்ளன,

மதிப்பீடுகளின்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் டெல்லியில் கிட்டத்தட்ட 26,000 EVகள் விற்பனை செய்யப்பட்டன. இந்தியா எனர்ஜி ஸ்டோரேஜ் அலையன்ஸின் சமீபத்திய அறிக்கை, இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை 2021 மற்றும் 2030 க்கு இடையில் ஆண்டுக்கு 49% வரை உயரக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது. .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *