மோசடி செய்ததா குப்பிட் நிறுவனம்?
உடலுறவு சார்ந்த சாதனங்களை உற்பத்தி செய்யும் குப்பிட் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்காளராக ஆதித்யா ஹல்வாசியாவும் ஹரிசங்கர் டிப்ரேவாலாவும் உள்ளனர். இவர்கள் அண்மையில் செய்த முதலீடுகள் குறித்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. டூரிசம் பைனான்ஸ் கார்ப் நிறுவனத்தில் முதலீடு செய்யும் திட்டத்தை திரும்பப்பெறுவதாக அறிவித்தது. குறிப்பிட்ட நிறுவனம்தான் ஹோட்டல்கள் மற்றும்டூர் ஆப்ரேட்டர்களுக்கு நிதி அளித்து வருகிறது. கடந்த செப்டம்பர் 2023-ல் கொலம்பியா பெட்ரோ கெம் நிறுவனம் குப்பிட் நிறுவனத்தை வாங்கியது. அதாவது 42 விழுக்காடு அளவுக்கு பங்குகளை 160 கோடிக்கு வாங்கியது. கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி ஆதித்யா தனது முதலீட்டில் 13.06 விழுக்காடு பங்குகளை டூரிசம் பைனான்ஸ் நிறுவனத்தை 250 கோடிக்கு வாங்கினார். வாங்கிய ஒரே வாரத்தில் அந்நிறுவனம் 200 கோடி ரூபாய் அளவுக்கு குப்பிட் நிறுவனத்தில் நிதி திரட்ட திட்டமிடப்பட்டது. இந்த நிறுவனங்களில் குப்பிட் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 2867 கோடி ரூபாயாகவும், டூரிசம் பைனான்ஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் மதிப்பு 1563 கோடி ரூபாயாக உள்ளது. இந்த நிறுவனங்களின் திடீர் பணப்பரிவர்த்தனைகள் குறித்து தற்போது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.