விசா, மாஸ்டர்கார்ட் நிறுவனங்கள் முறைகேடாக செயல்பட்டதா?
ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது அதற்கான பாதுகாப்பு டோக்கன்களை கார்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அளிப்பது வழக்கம் . கடந்த சில ஆண்டுகளாக இந்த பாதுகாப்பு டோக்கன்கள் அளிப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அமெரிக்க அரசின் பெடரல் டிரேட் கமிஷன் என்ற அமைப்பு இது தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளது இதில் விசா,மாஸ்டர் கார்ட் நிறுவனங்கள் முறைகேடு செய்ததற்கான சாட்சியும் உள்ளதா, அது தொடர்பான ஆதாரங்கள் உள்ளதா என்றும் ஆராயப்பட்டது. டெபிட் கார்டுகளில் உள்ள 16 இலக்க எண்களுக்கு பதிலாக டோக்கன்கள் வாயிலாக பணம் செலுத்த கார்டு நிறுவனங்கள் அளிக்கும் பாதுகாப்பு டோக்கன்கள் மிகமுக்கியமாக உள்ளது.
இந்த நிலையில் இந்த வகை டோக்கன்களை பயன்படுத்தும்போது தங்கள் நெட்வொர்க்குக்கு பதிலாக வேறு நெட்வொர்க் பயன்படுத்தும்போது நிராகரிப்பு அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பெரிய தொகை முறைகேடாக நெட்வொர்க்குகளுக்கு இடையே கைமாறியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து எப்டிசி அமைப்பு விசாரணை நடத்தயதை அடுத்து அந்த கார்டு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெடரல் ரிசர்வின் புதிய முறைப்படி இந்த இரு நிறுவனங்களும் செயல்பட்டு உள்ளதா என்ற சந்தேகத்தையும் பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.