ஸ்பேஸ் எக்ஸின் புதிய அறிவிப்பு தெரியுமா?
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்தியாவில் செயற்கைக்கோள் தொடர்பு சேவையை அறிமுகம் செய்ய இருக்கிறது. டேரக்ட் டு செல் என்ற வசதியின் மூலம் இணைய வசதியை செயற்கைக்கோள்களில் பெற முடியுமாம். உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் இதன் மூலம் இணைய வசதி பெற முடியும். உலகின் பல பகுதிகளில் இணைய வசதியே இல்லாத நேரங்களில் 6 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஒரு கற்றையில் 7 எம்பி அளவுக்கு இந்த இணைய சேவை கிடைக்கும் என்றும் சிம்கார்டு சேவையே கிடைக்காத அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இந்த சேவை எளிதாக கிடைக்கும் என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார்., வழக்கமான சிம்கார்டு நிறுவனங்களில் இருப்பதைப்போலவே வாய்ஸ் கால், இணைய சேவை உள்ளிட்டவற்றை இந்த புதிய வசதியில் செய்துகொள்ள இயலும். ஏற்கனவே செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைக்காக அனுமதி கோரி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிராயில் விண்ணப்பித்துள்து. அதே நேரம் ஸ்பேஸ் எக்ஸ் செயற்கைக்கோளும் உள்ளே புகுந்தால் சந்தையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் கணிக்கப்படுகிறது.