செபியின் புதிய விதி தெரியுமா..
ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளுக்கு reitsஎன்ற பெயர் வணிக வட்டாரங்களில் அழைக்கப்படுகிறது. இந்த அமைப்புகளை முறைப்படுத்தவும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்கவிக்கவும் புதியவிதிகள் கொண்டுவரப்பட உள்ளன. சில்லறை முதலீட்டாளர்கள், அதிக தொகை முதலீடு செய்வோர் ஆகியோரிடையே வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க புதிய விதிகள் உதவும் என்று கூறப்படுகிறது. சிறிய அளவில் ரியல் எஸ்டேட் செய்யும் நிறுவனங்கள் பல முறைப்படுத்தப்படாமல் இணையத்தில் இயங்கி வருகின்றன. 25 லட்சம் ரூபாயில் இருந்து இதற்கான பணிகள் நடந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதை முறைப்படுத்த செபி புதிய விதிகளை கொண்டுவருகிறது. அதன்படி சிறு மற்றும் நடுத்தர ரெய்ட்ஸ் நிறுவனங்கள் 50 கோடி ரூபாய் தொடங்கி 500 கோடி ரூபாய் வரை உள்ளவை ஒரு பிரிவாகவும், சிறு நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகையும் அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற முறைப்படுத்தும் திட்டம் வந்தால் இன்னும் அதிக முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் என்றும் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிதாக வந்துள்ள 7 விதிகள் : –டிக்கெட் சைஸ் என்ற வகையில் 25 லட்சத்துக்கு பதிலாக இனி 10 லட்சம் ரூபாய் போதும் என்று செபி குறைத்திருக்கிறது.வரும் நாட்களில் இது மேலும் குறையவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
–குறைந்தபட்ச முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 200ஆக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
–SM REITநிறுவனங்கள் குறைந்தபட்சம் 25 கோடி ரூபாய் முதல் 500கோடி ரூபாய் வரை சொத்து வைத்திருக்க வேண்டும்,
–தற்போதுள்ள REIT போலவே சிறு மற்றும் நடத்தர REITஇயங்கும் என்றும் மாற்றப்படுகிறது. –பட்டியலிடப்படும் நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் என்பதால் நிறுவனங்கள் வெளியேறுவதும் எளிதாகும். –குறைந்தது 2 ஆண்டுகள் இந்த துறையில் அனுபவம் இருத்தல் வேண்டும் என்றும் குறைந்தபட்சம் 20 கோடி ரூபாய் வரை பணப்புழக்கம் இருத்தல் வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அனுபவமே இல்லாத நிறுவனங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள நபர் பணியாற்ற வேண்டும் என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. –நிச்சயம் வாடகை வரும் என்ற வகையில் உள்ள 95%வீடுகளுக்கு புதிய விதி உதவும் என்றும் கூறப்படுகிறது. கோவா,கூர்க் உள்ளிட்ட பகுதிகளில் ஃபிராக்சனல் ஓனர்ஷிப் என்ற வகையில் வருவாய் ஈட்டும் வகையில் புதிய திட்டத்தை செபி வகுக்கும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.