ஆள விடுடா சாமி!!! என ஓடிய டிவிட்டர் ஊழியர்கள்!!!!
டிவிட்டர் நிறுவனத்தை பெரும் தொகை கொடுத்து எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து. அது தொடர்பான செய்தி வராத
நாளே இல்லை என்ற அளவுக்கு நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக புதுப்புது அவதாரங்களை மஸ்க் எடுத்து வருகிறார்
நிறுவனத்தை கைப்பற்றியதும் சிக்கன நடவடிக்கையாக பழைய பணியாளர்களில் 3-ல் 2 பங்கை வீட்டுக்கு அனுப்பிய மஸ்க்
தற்போது பணியாற்றும் ஊழியர்களை கசக்கி புழிந்து வருகிறார்.
வழக்கமான 8 மணி நேர வேலை என்றால் நோ சொல்லும் மஸ்க், விலங்குகள் போல கடுமையாக உழைக்க
நிர்பந்திக்கிறார். விடுப்பு இல்லாமல் பணியாற்ற வேண்டும்,வீட்டுக்கு செல்லக்கூடாது என்பன போன்ற நிபந்தனைகள்
மஸ்கின் சர்வாதிகார போக்கை பிரதிபலித்தது இந்த நிலையில் பல நாடுகளிலும் பணியாளர்களை மஸ்க் பணிநீக்கம் செய்துள்ளார். இந்த வகையில் டிவிட்டரின் பிரசல்ஸ் நாட்டு அலுவலகத்தில் ஒரு மிகச்சிறிய குழு பணியாற்றி வந்தது. அதில் ஏன் இத்தனை பேர் வேலை செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பிய மஸ்க், 8 பேரில் 6 பேரை பணிநீக்கம் செய்தார். வெறும் 2 பணியாளர்கள் மட்டுமே பிரசல்ஸ் நாட்டு டிவிட்டர் அலுவலகத்தில் வேலை செய்து வந்த நிலையில், கடுமையாக வேலை செய்ய வேண்டும் என மஸ்க் கூறி புதிதாக மெயில் அனுப்பினார் மஸ்க், ஏற்கனவே கடுமையான பணிச்சூழலால் கடுப்பில் இருந்த இரண்டு பணியாளர்களும் அவர்களும், உங்கள் வேலையும் வேண்டாம்,ஒன்றும் வேண்டாம் என ரிசைன் செய்துவிட்டு
ஓட்டம்பிடித்துள்ளனர். இதனால் டிவிட்டர் நிறுவனத்தின் பிரசல்ஸ் நாட்டு அலுவலகம் தற்போது மூடப்பட்டுள்ளது.