உங்க டுவிஸ்டுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!!!!
டிவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு முதன்முறையாக எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவன பணியாளர்களுக்கு
மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் சர்க்கரை தடவிய வார்த்தைகள் இனி இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்
மேலும் டிவிட்டர் நிறுவனம் கொரோனா காலத்தில் அளித்த வீட்டிலிருந்தே பணியாற்றும் வசதியை சில பணியாளர்களுக்கு
நிரந்தரமாக்கியது. ஆனால் டிவிட்டர் நிறுவனம் கைமாறியுள்ளதால் புதிய முதலாளியான மஸ்க் , அதனை தற்போது ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். வாரத்தில் 40 மணி நேரம் கட்டாயம் அலுவலகத்துக்கு வந்து வேலை செய்ய வேண்டும் என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார். 8டாலர் பணம் தந்து சில சேவைகளை பெறும் வசதியை டிவிட்டரில் சப்ஸ்கிரிப்சன் சேவை என்று அழைக்கிறார்கள். இந்த நிலையில் தனது பணியாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள மின்னஞ்சலில் பாதிக்கும் மேற்பட்ட அளவு
சப்ஸ்கிரிப்ஷன் சேவைகளை இலக்காக கொண்டு டிவிட்டர் நிறுவனம் பயணிப்பதாக கூறியுள்ளார். அண்மையில் ஸ்பேஸ் வசதியில் பேசிய டிவிட்டர் நிறுவன முதலாளி எலான் மஸ்க், தனது டிவிட்டர் நிறுவனம் பேஸ்புக்குக்கு போட்டியாக சிறந்த சமூக வலைதள நிறுவனமாக வலம் வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். 1 மணி நேரம் ஸ்பேஸ் வசதியில் பேசிய எலான் மஸ்க், சீனாவில் உள்ள வீ சாட் சமூக வலைதளத்தைப் போல அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய சூப்பர் ஆப்பாக டிவிட்டரை மாற்ற உள்ளதாகவும் கூறியுள்ளார்.